முளைக்கீரையில் உள்ள நார்ச்சத்தானது செரிமானத்தை சீராக்குவதுடன், கொலஸ்ட்ராலை குறைக்கிறது.
முளைக்கீரையில் இரும்புச்சத்து மற்றும் தாமிரச் சத்துக்கள் அதிகம் இருக்கிறது. இது நமது உடலில் ஓடும் இரத்தத்தைச் சுத்தம் செய்துவதோடு, இதிலுள்ள மணிச்சத்து மனிதர்களின் மூளை வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகின்றது. எனவே இக்கீரையை வளரும் பருவத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு அதிகம் கொடுப்பது நல்லது.
முளைக்கீரை உணவுக்குச் நல்ல சுவையூட்டுவது மட்டுமல்லாமல் பசியையும் தூண்டுகிறது.
முளைக் கீரைச் சாற்றில் சீரகத்தை ஊறவைத்து, உலர்த்தித் தூள் செய்து சாப்பிட்டால் பித்தம் அளவு சமசீராகி பித்தம் குறைபாடுகளால் ஏற்படும் மயக்கம் மற்றும் ரத்த அழுத்தம் போன்றவை சீராகும்.
முளைக்கீரை, துத்திக்கீரை இரண்டையும் சம அளவு எடுத்து சிறுபருப்பு சேர்த்து சமைத்து சாப்பிட்டால் உள்மூலம், பவுத்திர கட்டி, ரத்த மூலம் போன்றவை சரியாகும்.
நாக்கில் ருசியின்மை பிரச்னை ஏற்பட்டவர்கள் முளைக் கீரையுடன் சிறிது புளிச்சக் கீரை, மிளகு, மஞ்சள், உப்பு ஆகியவற்றை சேர்த்து, அவித்துச் சாப்பிட்டு வந்தால் இந்தக் குறைபாடு நீங்கும்.
முளைக் கீரைச் சாற்றில் உளுந்தம் பருப்பை ஊறவைத்து அதை அரைத்துச் சாப்பிட்டால் நீர்க்கடுப்பு மறையும்.
முளைக் கீரைச் சாற்றில் முந்திரிப் பருப்பு, மஞ்சள் சேர்த்து அரைத்து முகத்தில் அடிக்கடி தடவிவந்தால், முகப்பரு, தேமல் போன்றவை மறைந்து முகப் பொலிவு ஏற்படும்.
முளைக்கீரை கண் எரிச்சலைப் போக்கும். நரம்புத் தளர்வைப் போக்கி நரம்புகளுக்கு வலு கொடுக்கும். இருமல், தொண்டைப்புண் போன்றவற்றை குணமாக்கும் தன்மை கொண்டது.
சொறி, சிரங்கு போன்ற தோல் நோய்கள் ஏற்பட்டவர்கள் முளைக்கீரையை உண்பதினால் குணமடையும்.