ஆரோக்கியம் காக்கும் ஆரஞ்சு பழம் !

ஆரோக்கியம் காக்கும் ஆரஞ்சு பழம் !
Published on

ஆரஞ்சு பழத்தில் சக்தி வாய்ந்த ஆக்சிஜனேற்றிகளான பீட்டா கரோட்டீன்கள் அதிக அளவில் உள்ளன. இது சூரியக் கதிர்களால் சரும செல்களில் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கிறது மற்றும் முதுமை தோற்றம் ஏற்படாமல் தடுக்கிறது.

தினமும் ஒரு ஆரஞ்சு பழம் சாப்பிடுவதால் பெண்களுக்கு 50% புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறையும்.

உயர் இரத்த அழுத்த பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் கமலா ஆரஞ்சு பழத்தை சாப்பிட்டு வர நன்மை பயக்கும். இதில் உள்ள பொட்டாசியம் ரத்த அமுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கும்.

ஆரஞ்சு பழத்தின் தோலை உலர்த்தி, ஓமம், இந்துப்பு, சுக்கு சேர்த்து இடித்து பல்பொடியாக்கி தினமும் அதில் பல் தேய்த்து வந்தால் பற்கள் பளிச்சிடும். ஆரஞ்சு பழம் பல்சொத்தையை தடுக்கும். பால் அருந்த விரும்பாதவர்கள், ஆரஞ்சுப் பழச்சாறை சாப்பிடலாம். பாலில் கிடைக்கும் கால்சியச் சத்துபோல் ஆரஞ்சிலும் கிடைக்கும்.

ரத்த குழாய்களில் சேரும் கெட்ட கொழுப்பினை அகற்ற ஆரஞ்சு பழம் பயன்படுகிறது. மேலும் இதய பிரச்னைகள் வராமல் தடுக்கிறது. 

தூக்கமின்றி தவிப்பவர்கள், இரவு படுக்கைக்கு செல்லும் முன் ஆரஞ்சு பழச்சாற்றில் தேன் கலந்து சாப்பிட்டால் சுகமான தூக்கம் பெறலாம்.

மூட்டுகளில் வலி அல்லது வீக்கம் இருந்தால் கமலா ஆரஞ்சு ஜூஸை குடித்து வர நல்ல பலன் கிடைக்கும்.

கமலா ஆரஞ்சில் விட்டமின் சி அதிக அளவில் உள்ளது. இது நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தி உடலில் தொற்று நோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது.

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தினமும் காலை உணவு சாப்பிடும் முன் ஆரஞ்சு பழத்தை ஜூஸாக குடித்து வருவது நல்ல பலன் தரும்.

ஆரஞ்சு தினமும் உண்பதால் முகத்தில் அழகு கூடும், அதிக தாகத்தைத் தணிக்கும். வாய் துர்நாற்றத்தைப் போக்கும், உடல் வறட்சியை நீக்கும், உடல் சூட்டைத் தணிக்கும், தலைச் சுற்றல் நீங்கும்.

குழந்தைகளின் வளர்ச்சி சீராகவும் ஆரோக்கியமாகவும் இருக்க ஆரஞ்சு மிகவும் உதவுகிறது. இப்பழத்தை குழந்தைகளுக்கு நேரடியாகவோ அல்லது சாறு எடுத்தோ கொடுத்து வந்தால் குழந்தைகளின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com