சத்துமிக்க சாத்துக்குடி!

சத்துமிக்க சாத்துக்குடி!
Published on

சாத்துக்குடியில் பொட்டாசியம், கால்சியம் , நார்ச்சத்து, தாமிரம், மெக்னீசியம், வைட்டமின் சி, பாஸ்பரஸ், மினரல்கள் உள்ளன.

தினமும் ஒரு டம்ளர் சாத்துக்குடி ஜூஸ் குடிப்பது உடலில் இரத்த ஓட்டம் சீராக்குவதோடு , உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் செய்கிறது.

சிறுநீர் தொற்று பிரச்சனையை அவ்வப்போது எதிர்கொள்பவர்கள் தினமும் ஒரு டம்ளர் சாத்துக்குடி சாறு சாப்பிட்டு வந்தால் சிறுநீர் தொற்று நீங்கும்.

பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் ஏற்படும்  மட்டல் மற்றும் வாந்தியின் காரணமாக உண்டாகும் உடல் நீரிழப்பை ஈடுகட்ட சாத்துக்குடி பெரிதும் உதவுகிறது. மேலும் இது கருவின் வளர்ச்சிக்கும் நன்மை பயக்கும்.

ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க சாத்துக்குடி உதவுகிறது. இரத்த சோகை உள்ளவர்கள் தினசரி சாத்துக்குடி ஜூஸ் அருந்தலாம்.

குழந்தைகளின் வளர்ச்சிக்கும், பெரியவர்களின் எலும்புகளின் வலுவிற்கும் இன்றியமையாத கால்சியம் சத்து. சாத்துக்குடியில் நிறைந்துள்ளது.

மூட்டுவலி, கீல்வாதம் உள்ளவர்கள் தினமும் சாத்துக்குடி ஜூஸ் அருந்தி வந்தால் அப்பிரச்னைகளில் இருந்து விடுபடலாம்.

தினமும் ஒரு டம்ளர் சாத்துக்குடி சாறு கண்களுக்கு நன்மை பயக்கும். இது கண் தொற்று மற்றும் கண்புரைகளைத் தடுக்கிறது.

சாத்துக்குடி பழத்தில் அபரிமிதமான வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளது. உடலில் தேங்கும் நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது.

வயிற்றுப் போக்கு ஏற்பட்டால் சாத்துக்குடி ஜீஸ் குடித்தால் உடனே வயிற்றுப்போக்கு குணமடையும்

வாய் துர்நாற்றம் பிரச்சனை உள்ளவர்கள் தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாத்துக்குடி சாறு குடித்து வந்தால் இந்த பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

சாத்துக்குடியில் வைட்டமின்-சி நிறைந்துள்ளது, இது கொலாஜன் உற்பத்திக்கு வழிவகுத்து உங்கள் சருமத்தை பளபளப்பாக்குகிறது. இதிலுள்ள ஆன்டி ஆக்சிடண்டுகள் வயதான தோற்றம் ஏற்படுவதை தடுக்கிறது.

ஞாபகதிறனை மேம்படுத்தி நினைவாற்றலுடன் செயல்பட சாத்துகுடி பழம் சாப்பிடுவது மிகவும் நல்லது.

இந்த பழத்தில் லிமோனோய்ட்ஸ் என்கிற பொருள் உள்ளது, இதை தினமும் சாப்பிடுவதால் புற்று நோய் ஏற்படுவதற்கான ஆபத்து குறையும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

வாய் புண்கள் ஏற்படும் பொது சாத்துக்குடி சூலை சாப்பிடுவது நல்லது

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com