மனம் வலித்த தருணங்கள்!

ஓவியம்: பிள்ளை
ஓவியம்: பிள்ளை

பசி!

த்தனையோ இருந்தாலும் சமீபத்தில் ஒரு ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு வெளியே வரும்போது பசியால் வாடும் குழந்தைகள் இருவர் "இந்த புத்தகம் 20 ரூபாதான்… இத வாங்கினீங்கன்னா என் தங்கச்சி பாப்பாவிற்கு பாலும் பிஸ்கெட்டும் வாங்கித் தருவேன்” என்றதும் மனம் வலித்தது... பிச்சையாக பணம் கேட்காமல் புத்தகம் வாங்கிட்டு பணம் தாங்க என்று கேட்டதும்  கொடுத்து விட்டாலும் அந்த குழந்தைகள் முகம் மறக்கத்தான் முடியவில்லை.

படுத்துறங்க

பட்டுப்பாயும்

உடுத்தி மகிழ

பகட்டு ஆடையுமா

கேட்டோம்??

தெருவோரம்

தினம் தினம்

ஒரு சோற்றுப் பருக்கைக்கு

கையேந்தி நிற்கும்

எங்கள் பிஞ்சு கைகள்

செய்த பாவம்தான் என்ன??

எங்கள் பசி பட்டினி 

போக்க இந்த மண்ணில்

மருந்து ஏதும் உண்டா?

இறைவா

ஏன் பிறந்தோம்

தெரியவில்லை... ஆனால்,

தெரிகிறது

ஏழையாக மட்டும்

பிறக்கக் கூடாதென்று

 ‘டச்!’

திடீரென லிஃப்ட்டின் அருகே பேச்சுக்குரல்கள் கேட்க, தன் பெண் கண்மணி ஸ்கூலில் இருந்து வரும் நேரம் ஆச்சே. கீழே கூப்பிடப் போகாமல் அசந்து தூங்கி விட்டோமே என்று தன்னைத்தானே நொந்துகொண்டு, உடை மாற்றி வீட்டை சாத்தி திரும்புவதற்குள் "மேடம் இங்கே வாங்க" என்று செக்யூரிட்டியின் குரல் கேட்க என்னவோ ஏதோ என்று ஓடினாள் கவிதா.

pillai cartoons...
pillai cartoons...

லிஃப்ட் டின் வெளியே தன் பெண் கண்மணி, ஸ்கூல் பஸ்ஸில் கூட வரும் ஆகாஷ், மற்றும் கூட ஒருவர் என மூவரும் செக்யூரிட்டி இடம் ஏதோ சொல்லிக்கொண்டு இருந்தனர்.

"இந்த பாருப்பா. இவங்கதான் இந்த குழந்தையோட அம்மா. மேடம் அவரு ஏதோ சொல்றாரு. கேளுங்க" என்று செக்யூரிட்டி சொல்லவே,
"உங்க பொண்ணா.. இரண்டாம் கிளாஸ்தான் படிக்குதாம். என்ன படிக்கறே… என்ன ஸ்கூல்னு கேட்டதுக்கு ஸ்கேலால கைல அடி பின்னிடிச்சு. யாரு இன்சார்ஜ்.. நான் போய் ஸ்கூல்லயும் கம்ப்ளெண்ட் செய்ய போறேன்," என்றான் அந்த நபர்..

"முதலில் நீங்க யாரு?" 

"பக்கத்து கடையில எலக்ட்ரிக் வேலை செய்ய வந்தேன்."

"சரி… உங்களுக்கு இங்கே என்ன வேலை? யாரை பார்க்க வந்தீங்க? என்ன செக்யூரிட்டி சார்! யார் வராங்கன்னு கேட்க மாட்டீங்களா?" என்று கவிதா கேட்டு முடிப்பதற்குள்,

"அம்மா… இந்த அங்கிள் என்னைத் தொட்டு தொட்டு பேசினார்மா. நீதானே சொல்லி கொடுத்திருக்கே தெரியாதவங்க யாரும் தொட கூடாதுன்னு..."

இதையும் படியுங்கள்:
சுற்றுலா செல்லப் போகிறீர்களா? இதைப் படித்துவிட்டுப் புறப்படுங்கள்!
ஓவியம்: பிள்ளை

ஆகாஷ் "ஆமாம் ஆன்ட்டி. நாங்க பஸ்ஸில் இருந்து இறங்கி நடந்து வரும்போது கண்மணி கையை பிடிச்சுகிட்டே அவ கன்னத்தைத் தொட்டு பேசிட்டே வந்தாரு.. லிஃப்ட்க்குள்ளேயும் வந்து அவளைத் தொட்டு தொந்தரவு பண்ணிட்டு இருந்தாரு. நானே என்ன பண்ணலாம்னு யோசிக்கறதுக்குள்ளே கண்மணி ஸ்கேலால பட் பட்னு அடிச்சுட்டா…" ஆகாஷ் சொல்லி முடிப்பதற்குள் ஒரே ஓட்டமாக ஓடிவிட்டார் அந்த நபர்.

துரத்திய செக்யூரிட்டி, "மேடம் ஸாரி மேடம் ஓடிட்டான். இனிமே யாருன்னு கேட்காம அனுப்ப மாட்டேன்" என்ற செக்யூரிட்டி இடம்,
"அங்கிள் அம்மா யார் யார் எப்படி நடந்துப்பாங்க. எது நல்லது எது கெட்டதுன்னு சொல்லி கொடுத்திருக்காங்க. அதான் அவர் தொட்டதும் அடிச்சிட்டேன்" என்று குழந்தைத்தனத்துடன் கூறிய தன் சின்னஞ் சிறு கண்மணியை கட்டி அணைத்தாள் கவிதா.

(உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் எழுதியது... பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com