அழும் குழந்தையை சமாளிக்கணுமா? இந்த குறிப்புகள் கை கொடுக்கும்!

Home remedies for Crying Baby
Crying Baby
Published on
Mangayar malar
Mangayar malar

பெற்றோர்களே, உங்கள் குழந்தைகள் ஏன் திடீரென்று அழுகிறார்கள் என்பதை புரிந்துகொள்வது ஒரு பெரிய சவால்தான். பசி, வலி, சோர்வு என பல காரணங்கள் இருக்கலாம். இந்த சவாலான தருணங்களைச் சமாளிக்க, சில எளிய குறிப்புகள் உங்களுக்காக. உங்கள் குழந்தையின் ஆரோக்கியத்தையும் மகிழ்ச்சியையும் உறுதிப்படுத்த, இதோ சில பயனுள்ள டிப்ஸ்கள்!

  • குழந்தைகளுக்கு வயிறு உப்புசமாக இருந்தால், வெந்நீரில் சுக்கு தட்டிப்போட்டு வெது வெதுப்பாகக் கொடுத்தால், வாயு கலைந்து மோஷன் ஆகி சரியாகிவிடும்.

  • குழந்தை அழும்போது காதுப் பக்கம் தன் கையைக்கொண்டு போய் வைத்துக் கொண்டால் அது காது வலியினால் இருக்கலாம். உடனே மருத்துவரிடம் காண்பித்து தக்க சிகிச்சை அளிக்க வேண்டும்.

  • மழை, குளிர்காலங்களில் குழந்தைகள் வெறும் காலுடன் நடந்தால் 'சிலீர்' என்று குளிர் காலைத்தாக்கும். சாக்ஸை குழந்தைகளுக்கு வீட்டிற்குள் நடக்கும்போது போட்டு விட்டால் போதும்.

  • வீட்டில், குழந்தைகளுக்கு அடிக்கடி தொண்டைப்புண் வருகிறதா? உங்கள் வீட்டில் நாய், பூனை, பறவை எதேனும் வளர்க்கிறீர்களா? அப்படியானால் மிருக வைத்தியரிடம் அப்பிராணிகளை பரிசோதித்துப் பார்க்கச் சொல்லவும். பல நேரங்களில் வீட்டு வளர்ப்பு மிருகங்களிடமிருந்து குழந்தைகளுக்கு தொண்டைப் புண் வருவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

  • குழந்தைகளுக்கு ஒவ்வொரு நாளும் இடையே கொஞ்சம் கொஞ்சமாக காய்ச்சி ஆற வைத்த தண்ணீர் கொடுக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
சின்னச் சின்ன விஷயத்துக்கு எல்லாம் கோபம் வருதா? அதுக்கு காரணம் இதுவா கூட இருக்கலாம்!
Home remedies for Crying Baby
  • குழந்தையின் பற்களில் கரும் புள்ளிகள் மற்றும் ஓட்டை இருப்பின் பல் டாக்டரிடம் காண்பித்து உரிய சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

  • கைக்குழந்தை தூங்கும்போது பகலில் ஈத்தொல்லை மிகவும் அவதியாக இருக்கும். குழந்தையின் படுக்கையைச் சுற்றி கொஞ்சம் புதினா இலைகளை கசக்கிப் போட்டால் ஈக்கள் அந்தப் பக்கமே வராது.

  • பாலில் தேன் சேர்த்து வளரும் குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் அவர்கள் உடல் வளர்ச்சி சீராகவும் சரியாகவும் அமையும்.

  • குழந்தைகளுக்கு இரவு 1-2 பேரீச்சம் பழம் கொடுத்து பால் அல்லது தண்ணீர் குடிக்கக் கொடுத்தால் அவர்களது மனோபலம் கூடும், மூளை பலப்படும்.

  • குழந்தைகளுக்கு காதில் சீழ் பிடித்தால் உடனே கவனிக்க வேண்டும். பேசாமல் விட்டு விட்டால் சீழ் மூளைக்கு சென்று மூளை வளர்ச்சி பாதிக்கப் படும்.

  • குழந்தைகளை கோரைப்பாய் விரித்து அதன் மீது ஒரு துணியையும் விரித்துப் படுக்க வைத்தால் உடல் நலத்திற்கு நல்லது. எந்த சீதோஷ்ண நிலைக்கும் மிகவும் உகந்தது.

  • குழந்தைகளில் சிலருக்கு பால் அலர்ஜி இருக்கலாம். அவர்களுக்கு யோகார்ட் கொடுக்கலாம்.

இதையும் படியுங்கள்:
பக்கத்து வீட்டுக்காரன் செஞ்சா நீங்களும் செய்யணுமா? வீடு கட்டும்போது இந்த 12 செலவை உடனே நிறுத்துங்க!
Home remedies for Crying Baby
  • சிறு குழந்தைகளுக்கு அருகில் நாம் பெருக்குவதை தவிர்க்க வேண்டும். பெருக்கும்போது எழும் தூசியால், குழந்தைகளைத் தும்மல், இழுப்பு, ஆஸ்துமா போன்ற நோய்கள் பாதிக்கும்.

  • குழந்தைகளுக்குத் தேங்காயை வில்லைகளாகச் செய்து கடித்துச் சாப்பிடக் கொடுக்க வேண்டும். பசும்பாலை விட அதிகச் சத்து வாய்ந்தது தேங்காய்ப் பால்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com