
அம்மா நான் மவுசை க்ளிக் பண்ணித் தர்றேனே என்றேன்
நீ சின்னக் குழந்தைடா என்றாள் அம்மா
அப்பா நானும் சேர்ந்து காரைத் தள்ளறேன் என்றேன்
நீ சின்னக் குழந்தை என்றார் அப்பா
தாத்தா நான் உன் பொட்டியத் தூக்கறேன் என்றேன்
நீ குட்டி ராணீம்மா என்றார் தாத்தா
பாட்டி நான் உன் புடைவைய மடிக்கறேன் என்றேன்
நீ குட்டிப் பெண் கண்ணம்மா என்றார் பாட்டி
அண்ணா நான் உன் பேட்டைத் தூக்கறேன் என்றேன்.
போடி நீ பொடிக் குட்டி என்றான்
சித்தி எனக்கும் லிப்ஸ்டிக் போடு என்றேன்.
நீ சின்னக் குழந்தை என்றாள்.
அத்தை எனக்கும் வெத்தலை பாக்கு வேணும்ன்னேன்.
நீ சின்னக் குஞ்சாலி என்றார் அக்கா
நானும் உன் புக்குக்கு அட்டை போடறேன்னேன் நீ பேபி ஸ்மால் கேர்ல் என்றாள்
எல்லாரும் சேர்ந்து சாயந்திரம் கோவிலுக்கு கிளம்பினோம்
அப்பா தூக்கி நூனினோ என்று இரு கைகளையும் தூக்கினேன்
"நீ சின்னப் பாப்பம் இல்லையே பிக் கேர்ள் ப்ரிகேஜி போற.
நடந்து வரணும்" என்றார்கள் கூட்டமாக...
- கி. மாதங்கி