மங்கையர் மலர் தொடங்கிய காலத்திலிருந்து அதன் வாசகி நான் என்பதை பெருமையுடன் சொல்லிக் கொள்கிறேன். நான் திருச்சியில் இருந்தபோது மங்கையர் மலரை சர்குலேஷன் லைப்ரரிக்காரர் கொண்டு வந்து கொடுக்க சுடச்சுட அந்தந்த இதழினை படித்து விடுவேன்.
மங்கையர் மலரில் வரும் ஆசிரியரின் தலையங்கம், அன்புவட்டம் இவை எல்லாம் எனக்கு பிடித்த பகுதிகள். அதை படித்துவிட்டுத்தான் மற்ற பக்கங்களுக்கு போவேன். மிக அருமையான கோலங்கள் வரும்போது அவற்றை சேகரித்து வைத்துக் கொள்வேன். போட்டி என்னவென்று பார்த்து முதலில் அதற்கு தேவையானதை தயார் செய்து அனுப்ப வேண்டும் என்று உற்சாகத்துடன் போட்டியில் பங்கு பெறுவேன். பல பரிசுகளும் வாங்கி இருப்பதால் மேலும், மேலும் எப்போது போட்டி வரும், என்ன போட்டி வரும் என்று ஆவலுடன் மங்கையர் மலரை படிப்பேன். ஹைதராபாத்தில் இருந்த காலத்தில் கூட தமிழ் புத்தகம் கிடைக்கும் கடைக்குச் சென்று சொல்லி வைத்து மங்கையர் மலரை வாங்கி படித்திருக்கிறேன். நேற்று மங்கையர் மலரை ரசித்து படித்தேன், இன்று மங்கையர் மலரை ரசித்து படித்துக் கொண்டிருக்கிறேன் நாளையும் மங்கையர் மலர் எப்போது ஆன்லைனில் வந்தாலும் சரி ரசித்து படிப்பேன் என்ற நம்பிக்கையுடன் நான் அதனுடன் பயணிக்கிறேன். மங்கையர் மலருடன் நான் செய்த பயணத்தில் கற்றது பலப் பல. கற்க இருப்பது பலப் பல...