இந்தப் பறவைங்க உங்க வீட்டுக்கு வந்தா துரத்தி விட்றாதீங்க!

If these birds come to your house, don't chase them away!
Flying birds
Updated on

சாஸ்திரங்களின்படி சில பறவைகள் வந்தால் வீட்டிற்கு நல்லதாம், செல்வம் குவியுமாம்.

நல்ல காரியங்கள் நடக்கும் என்று சாஸ்திரங்கள் குறிப்பிடும் பறவைகள், உயிரினங்கள் எவை என்று தெரிந்துகொள்வோமே.

வீட்டிற்கு கிளி வந்தால் செல்வம் குவியுமாம். வானம்பாடி பறவைகள், ஹம்மிங் பேர்ட்ஸ் இவை வந்தால் உங்கள் வீட்டில் வளர்ச்சி ஏற்படுமாம்.

பச்சை வெட்டுக்கிளி என்பது மகாலட்சுமியின் அம்சம் என்று சொல்வார்கள். அதனால் பச்சை வெட்டுக்கிளி வீட்டிற்குள் வந்தால் மனதில் நினைத்த நல்ல காரியம் நிறைவேறும்.

சிட்டுக்குருவி துழையும் வீட்டினுள் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.

மயில்கள் வீட்டுக்குள் வந்தால். உங்களுக்கு வரப்போகும் பெரிய ஆபத்திலிருந்து முருகன் உங்களை காப்பாற்றி உள்ளார் என்பதே அர்த்தமாம்.

வானம்பாடி பறவைகள், ஹம்மிங் பேர்ட்ஸ் இவை வந்தால் உங்கள் வீட்டில் வளர்ச்சி ஏற்படுமாம். விரைவில் சுப காரியங்கள் கைகூடும் என்று அர்த்தம்.

தட்டான் பூச்சி வீட்டிற்குள் வந்தால் உபயோகத்தர்களுக்கு அலுவலகத்தில் பணிச்சுமை குறையும்.‌ தொழில் செய்பவர்களுக்கு தொழிலில் உள்ள சிக்கல்கள் நீங்கும்.

சனீஸ்வர பகவானின் வாகனமான காகம், நம்முடைய வீட்டிற்கு வந்தால் ஏழரைச்சனி, ஜென்ம சனி ஆகியவற்றின் உக்கிரம் குறையுமாம்.

இதையும் படியுங்கள்:
நான்கு கோடி பாடல்கள் பாடி ஆயிரம் பொற்காசுகளை பரிசாகப் பெற்ற புலவர்!
If these birds come to your house, don't chase them away!

கருப்பு எறும்பு சனி கிரகத்துடன் தொடர்புடையதாக கருதப்படுவதால், உங்கள் வீட்டிற்கு வாயில் முட்டையுடன் வந்தால், விரைவில் கடனில் இருந்து விடுபடுவீர்கள் என்று அர்த்தமாம்.

கருவண்டு வீட்டுக்கு வந்தால் வீட்டில் தீய சக்திகள் இருப்பதாக அர்த்தமாம். வீட்டில் யாராவது நோய்வாய்ப்படுவதைக் குறிக்குமாம்.

வவ்வால்கள் வீட்டிற்குள் வந்தால் துரதிர்ஷ்டம் என்று நம்பப்படுகிறது. எந்தக் காரியத்திலும் தடைகள் ஏற்படுமாம்.

கழுகு வீட்டிற்குள் வந்தால் குடும்பத்தில் பிரச்னைகள் அதிகரிக்கும். மேலும் குடும்ப உறுப்பினர்களுக்குள் விரிசல் ஏற்பட்டு உறவு முறிவு ஏற்படும் அபாயம் இருப்பதையே கழுகின் வருகை எச்சரிக்கின்றது.

logo
Kalki Online
kalkionline.com