திருமணத்திற்கு ரெடியாகிவிட்டால், செய்துகொள்ளுங்கள்!

திருமணத்திற்கு ரெடியாகிவிட்டால், செய்துகொள்ளுங்கள்!

பாலிவுட் பூமராங்!

நேக மொழி திரைப்படங்களிலும், வெப் தொடர்களிலும் தனது திறமையையும், அழகையும் காட்டி, ரசிகர்களைக் கவர்ந்து வரும் தமன்னா, பாலிவுட் நடிகர்
விஜய் வர்மாவை உயிருக்குயிராக காதலித்து வருகிறார்.

சமீபத்தில் தமன்னா அளித்த பேட்டி ஒன்றில், இத்தனை நாள் மறைத்து வைத்திருந்த தனது காதல் விஷயத்தை ஒப்புக்கொண்டார். ‘லஸ்ட் ஸ்டோரிஸ் – 2’ என்கிற வெப் தொடரில் இருவரும் இணைந்து நடிக்கையில், காதல் மலர்ந்துள்ளது.

திருமணம் குறித்து அவர் கூறியுள்ளதாவது: “திருமணம் செய்துகொள்ள விரும்பும்போது தள்ளிப் போடாமல், உடனே அதை நிறைவேற்ற வேண்டும். திருமணமென்பது மிகப் பெரிய பொறுப்பு என்பதால், தயாராக இருக்கையிலேயே செய்துகொள்வது அவசியம். பிறர் திருமணம் செய்து கொள்கிறார்கள் என்பதற்காக, செய்து கொள்ள முடியாது.

நான் சினிமாவிற்கு வந்த புதிதில், நடிகைகளுக்கான வாழ்க்கை 10 வருடங்களில் முடிந்து விடுமென்றும், 30 வயதில் திருமணம் செய்து குழந்தைகளைப் பெறுவேனென்றும் நினைத்தேன். ஆனால், 30ஆவது வயதில் மீண்டும் நான் பிறந்துள்ளேன்” என்பதாகும்.

ஸ்விக்கி (Swiggy) அனுப்பிய டின்னர்!

பாலிவுட் நடிகரான சூப்பர் ஸ்டார் ஷாருக்கான், தனது டிவிட்டரில் சுறுசுறுப்பாக செயல்படுபவர். டிவிட்டரில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் அளிப்பார். மிக சமீபத்தில், டிவிட்டரில் ஒருவர், “சாப்பிட்டாச்சா பாய்?” எனக் கேட்க, “ஏன் பாய், நீங்கள் ஸ்விக்கியில் வேலை செய்கிறீர்களா? டெலிவரி செய்வீர்களா?” என்று ஷாருக்கான் ஜாலியாக பதிலளித்தார். அதைக் கண்ட ஸ்விக்கி நிறுவன ஆட்கள் “நாங்கள் ஸ்விக்கியைச் சேர்ந்தவர்கள். சாப்பாடு அனுப்பி வைக்கட்டுமா? எனக் கேட்கையில், ஷாருக்கான் பதிலளிக்கவில்லை. ஸ்விக்கியின் அதிகாரப்பூர்வ கணக்கில் இருந்துதான் அந்த ட்வீட் வந்திருந்தது.

இதைத் தொடர்ந்து நடந்ததுதான் அந்தச் சம்பவம். எந்தச் சம்பவம்? ஸ்விக்கி 7 பேர்களிடம் சாப்பாடு கொடுத்து அனுப்ப, அவர்கள் ஷாருக்கான் பங்களாவான ‘மன்னத்’ முன்னால் வந்து நின்று புகைப்படம் எடுத்து, “ஸ்விக்கியிலிருந்து டின்னர் கொண்டு வந்திருக்கிறோம்” என ஷாருக்கானுக்கு அறிவித்தனர்.

ஷாருக்கான் ரசிகர்களுக்கு இச்செயல் மிக மகிழ்ச்சியை அளித்துள்ளது. அந்த டின்னரை SRK சாப்பிட்டாரா? இல்லையா? என்று பல ரசிகர்கள் கேட்டுள்ளனர். சிலரோ, “ஸ்விக்கி எங்களுக்கும் இவ்வாறு அனுப்பி வைக்குமா?” என கிண்டல் செய்துள்ளது.

ஸ்பைடர்மேன்; அக்ராஸ் தி ஸ்பைடர் வெர்ஸ்!

டந்த 2018ஆம் ஆண்டு, சோனி, மார்வெல் கூட்டுத் தயாரிப்பில் வெளியான அனிமேஷன் படமாகிய ‘ஸ்பைடர் மேன் இன் டூ தி ஸ்பைடர்வெர்ஸ்’க்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்தது.

மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸ் படங்களில் வரும் மல்டிவெர்ஸ் கதைக்களம் முதல்முறையாக இப்படத்தில்தான் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் இரண்டாவது பாகமான ‘ஸ்பைடர்மேன் அக்ராஸ் தி ஸ்பைடர்வெர்ஸ்” படம் சமீபத்தில் தியேட்டர்களில் வெளியானது. யுஏஇ, சவுதி மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் வரும் 22ஆந் தேதி இந்தப் படம் வெளியாக விருந்த நிலையில், சினிமா புக்கிங் தளங்களிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. காரணம், “சென்சார் போர்டு முன் வைத்த சில கோரிக்கைகள் நிறைவேற்றப்படாதது.” இப்படத்தில் இடம் பெறும் ஒரு காட்சியில் ஓரினச் சேர்க்கையாளர்கள் கொடி காட்டப்படுவதே தடைக்குக் காரணமெனக் கூறப்படுகிறது.

‘லைட் இயர்’ என்கிற அனிமேஷன் படமும் இதற்கு முன்பு இதே காரணத்திற்காக சவுதி போன்ற நாடுகளில் தடை செய்யப்பட்டது என்கின்றனர்.

logo
Kalki Online
kalkionline.com