அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு!

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு!
Published on
  • பாதாம், முந்திரி, அக்ரூட், பிஸ்தா போன்ற நட்ஸ்களில் அதிக புரோட்டின் மற்றும் நல்ல கொழுப்பு உள்ளது. இருந்தாலும் அதை அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்வாதால் வீக்கம் மற்றும் வாயு பிரச்னைகள், செரிமானத்தில் கோளாறுகள் ஏற்படுகிறது.

  • வாழைப்பழத்தில் குறைந்த அளவு கலோரிகள் இருப்பது உண்மை தான் ஆனால் அதனை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்ளும் போது, எடை அதிகரிக்கச் செய்யும். ஆஸ்துமா, கண் எரிச்சல், தொண்டை கரகரப்புபோன்றவை ஏற்படும். ஒற்றைத் தலைவலிக்கு உடலில் சுரக்கும் தைரமின் என்னும் சுரப்பி தான் காரணம். இவை அதிகப்படியான வாழைப்பழம் சாப்பிட்டால் சுரக்கும்.

  • அளவுக்கு அதிகமாக சாக்லெட் சாப்பிடுவதால் ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்படுகின்றன. பல்சொத்தை, தலைவலி, உடல் பருமன், மூளை பாதிப்பு, நீரிழிவு போன்ற பல பிரச்சினைகள் ஏற்படும்

  • தக்காளியை அதிகளவில் உணவில் சேர்த்துக் கொண்டால், சருமத்தில் அலர்ஜியை ஏற்படுத்தி, இருமல், தும்மல், தொண்டை எரிச்சல் போன்ற பிரச்சனையை உருவாக்கும்.

  • உடலின் தேவைக்கு மேல் தண்ணீர் குடித்தால் ரத்தத்தில் உள்ள உப்பின் அளவு (சோடியம்) நீர்த்துப்போகும். அதனால் மூளையில் வீக்கம் ஏற்படும் - அதுவும் முதியவர்களுக்கு. அதிகமாகத் தண்ணீர் குடிப்பதும் ஒருவித போதையை ஏற்படுத்தும்.

  • பால் ஊட்டச்சத்து மிக்கது. இதை தினமும் குடித்தால் கால்சியம் சத்து கிடைக்கும். ஆனால் அதற்காக அளவுக்கு அதிகமாகக் குடித்தால் உடல் சோர்வு, வயிறு மந்தம், நோய் அழற்சி போன்ற பிரச்னைகளை சந்திக்கக் கூடும்.

  • கீரையால் நமக்கு கிடைக்கும் நன்மை அதிகம்தான் என்றாலும் அதை அதிகமாகவும் உட்கொள்ளக் கூடாது. அதிக அளவில் கீரையை ஒரே நேரத்தில் சாப்பிடுவது நச்சு எதிர்வினையை உண்டாக்கும். நச்சுத்தன்மையை அதிகரித்துவிடும். கீரையில் அதிக நார்ச்சத்து இருப்பதால் அவை வாயு, வயிறு வீக்கம், குடல் வீக்கம் , வயிற்றுப் பிடிப்பு , வயிற்று வலி, வயிற்றுப் போக்கு போன்ற உபாதைகளை உண்டாக்கும்.

  • பேரிச்சம் பழத்தில் இரும்புச் சத்து அதிகம் உள்ளது. அதற்காக ஒரே வேளையில் அளவுக்கு அதிகமாக பேரிச்சம் பழத்தை சாப்பிடும் போது, அதிலுள்ள கிளைசீமிக் இன்டெக்ஸ் 103, டைப்-2 சர்க்கரை நோயை வரவழைத்துவிடும்.

  • தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரை பார்க்க வேண்டிய அவசியம் இல்லை என்பது பழமொழி. ஆனால் அளவுக்கு அதிகமாக இதை சாப்பிட்டால்,  இதிலுள்ள அதிகப்படியான கார்போஹைட்ரேட் சத்து ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிப்பதோடு மட்டுமல்லாது, உடல் எடையை அதிகரிக்க செய்துவிடுகிறது.

  • அளவுக்கு அதிகமாக நெய் சாப்பிடுவது உடலிலுள்ள கபத்தை அதிகரிக்கும், கல்லீரல் மற்றும் மண்ணீரல் தொடர்பான பிரச்னை ஏற்படுத்தும் .

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com