கல்கியின் படைப்புகளில் பெண்களின் முக்கியத்துவம்!

செப்டம்பர் – 9 அமரர் கல்கி அவர்களின் பிறந்தநாள்!
kalki birthday special article
அமரர் கல்கி
Published on

மிழ் இலக்கியத்தின் புகழ்பெற்ற எழுத்தாளர்களில் ஒருவரான கல்கி, தனது படைப்புகளில், வலிமையான, அறிவார்ந்த,  முற்போக்கு சிந்தனைகள் கொண்ட பெண் கதாபாத்திரங்களை சித்தரித்திருக்கிறார்.

முக்கிய கதாபாத்திரங்களாக பெண்கள். 

கல்கியின் பல பெண் பாத்திரங்கள் கதையின் மையமாக, கதையை முன்னோக்கி செலுத்தும் பாத்திரங்களாக படைக்கப்பட்டுள்ளனர். பொன்னியின் செல்வனில் வரும் நந்தினி தன் அழகு மற்றும் புத்திசாலித்தனத்தால் வரலாற்றின் போக்கை எப்படி மாற்ற முடியும் என்பதை காட்சிப்படுத்துகிறார். அதேபோல நல்லொழுக்கம், அரசியல், புத்திசாலித்தனம் மற்றும் விசுவாசம் மிக்க குந்தவை சோழ வம்சத்தின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிப்பதையும் மிக அழகாக சித்தரித்திருக்கிறார். சிறுகதைகளில் கூட பெண்கள் முக்கியக் கதாபாத்திரங்களாக வடிமைக்கப்பட்டுள்ளது சிறப்பு.

கல்கியின் பெண் பாத்திரங்கள்....
கல்கியின் பெண் பாத்திரங்கள்....

புதுமைப் பெண்கள்; 

கல்கியின் பெண் பாத்திரங்கள் பெரும்பாலும் சமூக எதிர்பார்ப்புகளை மீறிய புதுமைப் பெண்கள். வழக்கமான ஸ்டீரியோடைப்பிக் பாத்திரங்களாக இல்லாமல் போர் வீரர்களாகவும் அரசியல் வாதிகளாகவும் சித்தரிக்கப்படுவது புதுமை. பொன்னியின் செல்வனில், பூங்குழலி ஆண்கள் செய்யக்கூடிய படகோட்டும் பணியை செய்வது, சிவகாமியின் சபதத்தில் வரும் மணிமேகலை சமூக அழுத்தங்களுக்கு மேல் அன்பையும் தனிப்பட்ட சுதந்திரத்தையும் முன்னெடுக்கும் பெண்ணாக வடிமைக்கப்பட்டுள்ளது கல்கி முற்போக்கான அணுகுமுறையை வெளிப்படுத்துகிறது.

பன்முக ஆளுமைகள்; 

கல்கியின் பெண் கதாபாத்திரங்கள் பன்முக ஆளுமைகள் கொண்டவர்கள். சிக்கலானவர்கள் மற்றும் உணர்ச்சிகள், பண்புகள், லட்சியங்கள் கொண்டவர்கள். எடுத்துக்காட்டாக சிவகாமியின் சபதத்தின் சிவகாமி, திறமையான நடனக் கலைஞர் மட்டுமல்ல, பழிவாங்கும் உறுதி, ஆழ்ந்த அன்பு, தியாகம் போன்ற உணர்வுகளில் பன்முகத்தன்மை கொண்ட பெண்ணாக மிளிர்கிறார். பார்த்திபன் கனவில் வரும் குந்தவை, வள்ளி, பொன்னியின் செல்வனின் வானதி போன்றோர் மென்மையும், மனவலிமையும், விசுவாசமும் மேன்மையும் கொண்ட கதாபாத்திரங்கள். 

லட்சியத்தின் திருவுருக்கள்; 

பெண் பாத்திரங்கள் பெரும்பாலும் தேசபக்தி, விசுவாசம் அன்பு மற்றும் தார்மீக ஒருமைப்பாடு போன்ற உயர்ந்த கொள்கைகளை கொண்டவர்கள். அவர்களது பலம் அரசியல் அதிகாரத்தில் மட்டுமல்ல அசைக்க முடியாத அர்ப்பணிப்பிலும் உள்ளது. குந்தவை அருளுக்கும் ஞானத்திற்கும் மட்டுமல்ல சோழ சாம்ராஜ்யத்தின் மீது அவள் வைத்திருக்கும் ஆழ்ந்த அன்பு, தீவிர அரசியல் நுண்ணறிவு, மற்றும் சிவகாமியின் கலைச்சாதனை, கலாச்சார பாரம்பரியம் மற்றும் தனிப்பட்ட சபதங்களின் முக்கியத்துவத்தை குறிக்கிறது.

கல்கியின் ‘அலை ஓசை...
கல்கியின் ‘அலை ஓசை...

முற்போக்கான அணுகுமுறை;

கல்கியின் பெண்கள், பெண்களின் சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் ஆணாதிக்க கட்டமைப்புகளை விமர்சிப்பவர்கள். வரலாறு, கலாச்சாரம் மற்றும் அரசியலை வடிவமைப்பதில் சமமான பங்கேற்பாளர்கள் .‌ ஆணாதிக்கம் நிறைந்த அந்த பழமைவாத சமூகத்தில் கல்கியின் பெண்கள் குறித்த முற்போக்கான அணுகுமுறை மிகவும் பாராட்டத்தக்கது.

கல்கியின் ‘அலை ஓசை’ போன்ற சமூகப் புதினங்களில் பெண் கதாபாத்திரங்கள் பெண்மையின் பல்வேறு அம்சங்களை பிரதிபலிக்கின்றன. அவர்கள் குடும்பப் பெண்களாக இருந்தாலும் சரி சுதந்திரப் போராட்ட வீரர்களாக இருந்தாலும், சமூகக் குழப்பங்களுக்கு நடுவிலும் தனிப்பட்ட அடையாளத்தை தேடும் நபர்களாக, அரசியல் துறைகளிலுல் குறிப்பிடத்தக்க பங்கை வழங்குகிறார்கள் என்பதை காட்டுகிறது. 

இதையும் படியுங்கள்:
முதல்ல உங்கள நம்புங்க சார்!
kalki birthday special article

சமூக விடுதலை;

தியாக பூமி நாவலில், தன் கணவரின் நியாயமற்ற கோரிக்கைகளுக்கு கீழ்ப்படிய மறுக்கும் ஒரு பெண்ணாக வரும் சாவித்திரி, தமிழ் இலக்கியத்தில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம். பெண்களின் தனிப்பட்ட மற்றும் சமூக விடுதலையை சேர்த்து அடையாளப்படுத்துகிறாள். சுயமரியாதை மற்றும் சமூக உணர்வுள்ள ஒரு புதிய பெண்ணாக காட்சியளிக்கிறாள். பெண்களின் உரிமைகள், குழந்தைத் திருமணம், வரதட்சணை போன்ற பிரச்சனைகளை கையில் எடுத்து, சமுதாயப் பிரச்சனைகளை தீர்ப்பதில் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதன் அவசியத்தை  குறிக்கிறாள். 

கல்கியின் பெண்கள், வலிமை, நெகழ்ச்சி, அன்பு, தியாகம் போன்ற  பன்முகத்தன்மை கொண்டவர்களாகவும், சமூக அநீதிக்கும், தீமைகளுக்கும்  சவால்விடும் பாத்திரங்களாகவும் உலா வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com