பெருமைமிகு இந்தியப் பெண் பொறியாளர்கள்!

(ஜூன் 23 சர்வதேச பொறியியல் பெண்கள் தினம்)
Women engineers
Women engineers

பொறியியல் துறையில் பெண்கள் உலகம் முழுவதும் இப்போது கோலோச்சி வருகிறார்கள். உலகின் முதல் பெண் பொறியாளர் அமெரிக்காவைச் சேர்ந்த எடித் கிளார்க், முதல் பெண் மின் பொறியியல் பேராசிரியராக அறியப்படுகிறார். 1921 ஆம் ஆண்டு கிளார்க் கால்குலேட்டரைக் கண்டுபிடித்தார். இது மின் பொறியாளர்கள், மின் இணைப்புகளைப் புரிந்துகொள்ளப் பயன்படுத்திய சமன்பாடுகளை எளிமைப்படுத்தும் சாதனமாகும். சர்வதேச பொறியியல் பெண்கள் தினத்தையொட்டி, இந்தியாவில் பெண் பொறியாளர்கள் செய்த சாதனைகளைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

1. அய்யாலசோமயாஜுலா லலிதா:

அய்யாலசோமயாஜுலா லலிதா:
அய்யாலசோமயாஜுலா லலிதா:

இவர் இந்தியாவின் முதல் பெண் பொறியாளர். 1943 ஆம் ஆண்டு சென்னை கிண்டி பொறியியல் கல்லூரியில் மின் பொறியியலில் பட்டம் பெற்றார். இவர் இந்தியாவின் மிகப்பெரிய நீர் மின் திட்டங்களில் ஒன்றான பக்ராநங்கல் அணை உட்பட துணை மின் நிலைய அமைப்புகளின் வடிவமைப்பில் பணியாற்றினார். 1964 ஆம் ஆண்டு நியூயார்க்கில் நடந்த முதல் சர்வதேச பெண் பொறியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் மாநாட்டில் இந்தியாவின் சார்பில் கலந்து கொண்டார்.

2. ராஜேஸ்வரி சட்டர்ஜி:

ராஜேஸ்வரி சட்டர்ஜி:
ராஜேஸ்வரி சட்டர்ஜி:

கர்நாடகாவின் முதல் பெண் பொறியாளர். இந்திய அறிவியல் நிறுவனத்தில் மைக்ரோவேவ் ஆராய்ச்சி வசதியை நிறுவி மைக்ரோவேவ் மற்றும் ஆண்டெனா பொறியியல் துறையில் முன்னோடியாக இருந்தார். பாதுகாப்பு பயன்பாடுகள் மற்றும் ரேடார் தொழில்நுட்பத்தில் அவரது பங்களிப்புகள் குறிப்பிடத்தக்கவை.

3. சகுந்தலா ஏ பகத்:

சகுந்தலா ஏ பகத்
சகுந்தலா ஏ பகத்

புகழ்பெற்ற சிவில் இன்ஜினியரான சகுந்தலா, குவாட்ரிகான் என்ற நிறுவனத்தை அமைத்து புரட்சியை ஏற்படுத்தினார். 1993 ஆம் ஆண்டின் சிறந்த பெண் பொறியாளர் என்ற பட்டத்தை பெற்றார். இந்தியா முழுவதும் 200க்கும் மேற்பட்ட குவாட்ரிகான் எஃகு பாலங்களைக் கட்டுவதில் சாதனை படைத்துள்ளார்.

4. லீலம்மா ஜார்ஜ் கோஷி:

லீலம்மா ஜார்ஜ் கோஷி
லீலம்மா ஜார்ஜ் கோஷி

கேரளாவின் முதல் பெண் பொறியாளர். 1944 ஆம் ஆண்டு கிண்டி பொறியியல் கல்லூரியில் சிவில் இன்ஜினியரிங் பட்டம் பெற்றார். இங்கிலாந்தில் நகர திட்டமிடல் துறையிலும் பின்னர் திருவனந்தபுரத்திலும் பணிபுரிந்தார்.

5. பி.கே திரெஸ்ஸியா

பி.கே திரெஸ்ஸியா
பி.கே திரெஸ்ஸியா

1971 ஆம் ஆண்டு கேரளாவில் பொதுப்பணித் துறையில் (PWD) மதிப்புமிக்க தலைமைப் பொறியாளர் பதவியை வகித்த இந்தியாவின் முதல் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றார் . ஏராளமான பாலங்கள் மற்றும் சாலை கட்டுமானத் திட்டங்களை அவர் மேற்பார்வையிட்டார்.

6. இலா கோஷ் / இலா மஜும்தார்

இலா மஜும்தார்
இலா மஜும்தார்

மேற்கு வங்கத்தின் முதல் இந்திய பெண் பொறியாளர் இலா மஜும்தார், 1951ல் இந்தியாவின் முதல் இயந்திர பொறியாளராக பட்டம் பெற்றார். இலா கோஷ் வங்காளதேசத்தின் டாக்காவில் மகிளா பாலிடெக்னிக் கல்லூரியை நிறுவி, பெண்கள் பொறியியல் கல்வி பெற பங்களித்தார்.

7. சுதிரா தாஸ்:

சுதிரா தாஸ்
சுதிரா தாஸ்

ஒடிசாவின் முதல் பெண் பொறியாளரான இவர், புவனேஸ்வரில் மகளிர் பாலிடெக்னிக் நிறுவனத்தை நிறுவி, பெண்களுக்கு தொழில்நுட்பக் கல்விக்கு வழிவகுத்தார்.

இதையும் படியுங்கள்:
இந்திய உணவில் முருங்கைக் கீரையின் பங்கு மற்றும் பயன்கள்!
Women engineers

8. டெஸ்ஸி தாமஸ்:

டெஸ்ஸி தாமஸ்
டெஸ்ஸி தாமஸ்

"இந்தியாவின் ஏவுகணை பெண்மணி" என்று அழைக்கப்படும் இவர், 1988 முதல் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் (DRDO) பாலிஸ்டிக் ஏவுகணைகளை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகித்தார், இந்தியாவின் பாதுகாப்பு திறன்களுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கினார். அவர் அக்னி-IV ஏவுகணைக்கான திட்ட இயக்குநராகவும், அக்னி-V திட்டத்தில் முக்கிய நபராகவும் இருந்தார்.

9. டி.கே. அனுராதா:

டி.கே. அனுராதா
டி.கே. அனுராதா

இஸ்ரோவின் முதல் பெண் செயற்கைக்கோள் திட்ட இயக்குநராக இவர் வரலாறு படைத்தார். இந்தியாவின் விண்வெளி திட்டங்களுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கினார்.

இதையும் படியுங்கள்:
புற்றுநோய் சிகிச்சையில் புதிய திருப்புமுனை… கடலில் கிடைத்த பொக்கிஷம்!
Women engineers

10. அருணா ஜெயந்தி:

அருணா ஜெயந்தி
அருணா ஜெயந்தி

ஆணாதிக்கம் மேலோங்கும் ஐடி துறையில் தடைகளை உடைத்தெறிந்துள்ளார். இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனங்களில் ஒன்றான கேப்ஜெமினி இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்தார். 2021ல், கேப்ஜெமினியின் கனடா வணிகப் பிரிவுகளின் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டார்.

இந்தியப் பெண் பொறியாளர்கள் உலகெங்கிலும் உள்ள எதிர்காலத் தலைமுறை பெண் பொறியாளர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்றனர் என்பது பெருமிதப்பட வேண்டிய விஷயம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com