

2012 ஆம் ஆண்டு, மங்கையர் மலர் இதழில், 'இனிய இயற்கை மருத்துவம்’ என்ற தலைப்பில் கட்டுரைகள் தொடர்ந்து வெளிவந்தன. அத்தொடரிலிருந்து சில பகுதிகள் இங்கே இத்தொடரில்...
தொடரின் அனைத்துப் பகுதிகளையும், மேலும் பல சுவாரஸ்யமான கதை, கட்டுரைகளையும் கல்கி களஞ்சியத்தில் சந்தா செலுத்திப் படிக்கலாம்.
சந்தா செலுத்த...
இயற்கை மூலிகை மருத்துவம் ஒரு மருத்துவ முறை மட்டுமல்ல; ஒரு சிறந்த வாழ்க்கை முறையுமாகும். இதனை முறையாக கடைபிடிப்பவர்கள் வயதான காலத்திலும் பூர்ண ஆரோக்கியத்துடன் வாழமுடிகிறது. மனிதனைத் தவிர மற்ற அனைத்து உயிரினங்களும் தம் வாழ்நாள் முழுவதும் கன்றுகளை ஈனுகின்றன. பறவைகள் வருடா வருடம் ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர்கள் கடல் பரப்பின் மீது ஓய்வின்றி பறந்து வருகின்றன. அவற்றிற்கு கண் பார்வை நன்றாகவே உள்ளது. இவற்றின் ஆரோக்கிய ரகசியம், இயற்கையோடு இணைந்து வாழ்வதுதான்.
நல்ல மனநிலை, தூய காற்று, சுத்தமான நீர், நீண்ட ஆழ்ந்த தூக்கம், கூட்டுக் குடும்பத்தில் மூத்தோரின் அக்கறையான பாதுகாப்பில் குழந்தை வளர்ப்பு, நீச்சல், சிலம்பம், கும்மி, சடுகுடு போன்ற உடலுக்கு உரமேற்றிய விளையாட்டுகள், பலவகை மரங்கள் அடர்ந்த கோயில் / புறம்போக்கு நிலங்களால் நல்ல மழை, சமுதாய நல்லொழுக்கங்கள் இவையெல்லாம் மிகுந்திருந்த அந்த நாட்களில், இறுதிக் காலம் வரை பலருக்கு கண்கள், காதுகள், பற்கள் அனைத்தும் நன்றாகவே இருந்தன.
இயற்கை மருத்துவ தத்துவத்தின்படி, நோய்கள் பல. ஆனால் தீர்வு ஒன்றுதான். அதாவது கழிவுகள் தேக்கமே நோய்; கழிவுகளின் நீக்கமே குணம்.
இந்த வரிசையில், இயற்கையின் அருட்கொடையான உணவை எப்படி ஜீரணிக்கிறோம் என்பதைப் பற்றி பார்ப்போம்….