இனிய இயற்கை மருத்துவம் 4 - அண்ட பேரண்டங்களை இயக்கும் மையப்புள்ளி!

இயற்கை மருத்துவ நிபுணர் எம். முத்துக்குமார்
Iniya iyarkai maruthuvam - Peroli
Iniya iyarkai maruthuvam - Peroli
Updated on

2012 ஆம் ஆண்டு, மங்கையர் மலர் இதழில், 'இனிய இயற்கை மருத்துவம்’ என்ற தலைப்பில் கட்டுரைகள் தொடர்ந்து வெளிவந்தன. அத்தொடரிலிருந்து சில பகுதிகள் இங்கே இத்தொடரில்...

தொடரின் அனைத்துப் பகுதிகளையும், மேலும் பல சுவாரஸ்யமான கதை, கட்டுரைகளையும் கல்கி களஞ்சியத்தில் சந்தா செலுத்திப் படிக்கலாம்.

சந்தா செலுத்த...

Mangayar malar strip
Mangayar malar strip

உணவு, உடை, வாழ்விடம், வாழ்க்கை முறை போன்ற அனைத்தையும்விட, மனநிலை என்பதுதான் உடல்நிலையை மாற்றும் மிக முக்கியக் காரணி.

நல்ல எண்ணங்களையே நினைக்க வேண்டும். நமது எண்ணங்களை ஒளிவு மறைவின்றி வெளிப்படையாகப் பேச வேண்டும். அதாவது, மகிழ்ச்சி, கோபம் போன்ற உணர்ச்சிகள், எதிரில் இருப்பவர்களுக்கு நன்கு தெரியவேண்டும். அப்போதுதான், நமது ரத்தத்தின் தூய்மை கெடாது. நோய்களும் அண்டாது. நம் முன்னோர்கள் நல்ல உடல் நலமும், நீண்ட ஆயுளும் பெற்று வாழ்ந்ததற்கு இதுபோன்ற ஆரோக்கியமான மனநிலையே முக்கிய காரணமாகும்.

ஒவ்வொரு மனிதனும் தனது மனநிலை என்ற கண்ணாடியின் மூலமே இந்த உலகைப் பார்க்கிறான். அதற்கேற்ற பலன்களை இந்த உலகத்திலிருந்து அறுவடை செய்கின்றான்.

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com