இனிய இயற்கை மருத்துவம் 5 - நோய் வளர உதவும் உணவை உடனே நிறுத்துங்கள்!

இயற்கை மருத்துவ நிபுணர் எம். முத்துக்குமார்
Iniya iyarkai maruthuvam - Junk food
Iniya iyarkai maruthuvam - Junk food
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

2012 ஆம் ஆண்டு, மங்கையர் மலர் இதழில், 'இனிய இயற்கை மருத்துவம்’ என்ற தலைப்பில் கட்டுரைகள் தொடர்ந்து வெளிவந்தன. அத்தொடரிலிருந்து சில பகுதிகள் இங்கே இத்தொடரில்...

தொடரின் அனைத்துப் பகுதிகளையும், மேலும் பல சுவாரஸ்யமான கதை, கட்டுரைகளையும் கல்கி களஞ்சியத்தில் சந்தா செலுத்திப் படிக்கலாம்.

சந்தா செலுத்த...

Mangayar malar strip
Mangayar malar strip

எந்தெந்த காரணங்களால் உடல் எடை அதிகமாகிறது என்பதையும், அதனால் வரும் உடல்நல அபாயங்களையும், இவற்றைப் பாதுகாப்பாக நீக்கும் இயற்கை மருத்துவ அணுகுமுறைகள் பற்றியும் பார்ப்போம்...

சிறிய மண் தொட்டியில் வளரும்போது ஒரு செடி 100 அல்லது 200 கிராம் எடை இருக்கிறது. நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்னும் பஞ்சபூதங்களையும் தகுந்த விகித்தில் பெற்று, அது வளருகிறது. அந்தச் செடியானது, பத்து வருட வளர்ச்சியில் பெரிய மரமாகும்போது டன் கணக்கில் எடை அதிகரித்து விடுகிறது.

அந்த மரத்தை கவனமாகப் பிடுங்கி வெயிலில் காயவைத்தால், தனது பெருமளவு எடையை இழந்து விறகாகி விடுகிறது. பின் அதனைத் தீயிட்டு எரித்தால், முடிவில் மிக குறைந்த எடையில் சாம்பல் மட்டுமே கிடைக்கிறது.

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com