தந்தைக்கு மகப்பேறு விடுப்பு அவசியமா?

தந்தைக்கு மகப்பேறு விடுப்பு அவசியமா?

மீபத்தில் மும்பையைச் சேர்ந்த அன்கிட் ஜோஷி என்ற ஐ.ஐ.டி பட்டதாரி தனியார் நிறுவனத்தில் அதிக சம்பளத்தில் தான் வகித்த வைஸ் பிரசிடெண்ட் பதவியை ராஜினாமா செய்தார். தந்தையாக பதவி உயர்வு கிடைத்திருப்பதால் தன் குழந்தையை பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக ராஜினாமா செய்திருக்கிறார் என்று இது குறித்து செய்தித்தாளில் படித்தபோது, மனம் நெகிழ்ந்து போனதோடு, சிந்திக்கவும் வைத்தது.

அன்கிட் ஜோஷி
அன்கிட் ஜோஷி

‘’குழந்தையின் பிறப்பு என்பது பெற்றோர் வாழ்வில் மிகவும் முக்கியமான தருணம். குழந்தையை பார்த்துக் கொள்வது, தாலாட்டுப் பாடுவது, தூங்க வைப்பது என குழந்தையோடு செலவிடும் நேரங்கள் என் வாழ்வில் மகத்தானவை. சில மாதங்கள் கழித்து எனக்கு வேறு வேலை கிடைக்கும். ஆனால், என் குழந்தையுடன் இருக்கும் இந்தத்  தருணங்களை நான் இழக்க விரும்பவில்லை’’ என்று அன்கிட் ஜோஷி கூறியிருக்கிறார். 

பாலூட்டும் தாய் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் வலிமையுடன் இருக்க வேண்டும். அமைதியான ஆனந்தமான சூழலில் அவள் இருப்பது அவசியம். பிரசவித்த பெண்ணின் தாய் தன் மகளுக்கு சத்துள்ள உணவு தயாரித்துக் கொடுப்பது, குழந்தையின் டயப்பர் மாற்றுவது, வீட்டை கிருமித்தொற்றில் இருந்து சுத்தமாக வைத்துக்கொள்வது, வீட்டுக்கு வரும் விருந்தினர்களைக் கவனிப்பது என சோர்ந்து போவார். மத்திம வயதில் இருக்கும் அவரால் ஒரு சேர குழந்தையையும் தன் மகளையும் பார்த்துக்கொள்வது மிகக் கடினமே. 

ற்போது சிசேரியன் பிரசவங்கள் பெருகிவிட்ட நிலையில், பிரசவித்த சில நாட்களுக்கு ஒரு தாய், தானாக குழந்தையை கையில் எடுத்து பாலூட்ட முடியாது. அந்த நேரத்தில் கணவன் அருகில் இருந்தால், பசித்து அழும் குழந்தையை எடுத்து தாயிடம் கொடுப்பது, டயப்பர் மாற்றுவது, குழந்தையை தூங்க வைப்பது போன்ற வேலைகளைச் செய்யலாம். இதனால் அவளுக்கு மிகுந்த மன அமைதியும் தேவையான ஓய்வும் கிடைக்கிறது. விரைவில் அவள் உடல் தேறி வர உதவியாக இருக்கும். கூடவே இருந்து கவனித்தால் தான் ஒரு கணவனுக்கு பிள்ளை வளர்ப்பில் தன் மனைவி படும் கஷ்டங்கள் தெரியவரும். தன் மனைவியையும் பிள்ளையையும் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கொள்வார்.

சென்ற தலைமுறையை சேர்ந்த தந்தைகளில் பலருக்கு பிறந்த குழந்தையை தூக்கத் தெரியாது. குழந்தை வளர்ப்பு முழுக்க முழுக்க பெண்களின் பொறுப்பு என்ற எண்ணம் அவர்களுக்கு உண்டு. குழந்தை அழுதால், ‘குழந்தை அழுகுது; என்னனு பார்’ என்பதோடு அவர் கடமை முடிந்து விடும். அன்கிட் ஜோஷியைப் போன்று தந்தைமார்கள் வேலையை ராஜினாமா செய்ய வேண்டும் என்பது அவசியம் இல்லைதான். ஆனால், குழந்தைப் பிறந்ததிலிருந்து தாய்க்கு இணையாக தந்தையும் குழந்தையை பார்த்துக் கொண்டால், அந்தக் குழந்தை மிகவும் ஆரோக்கியமாக வளரும் என்பதில் சந்தேகம் இல்லை. தாய்க்குத் தருவது போல தந்தைக்கும் உரிய மகப்பேறு விடுப்பு எதிர்காலத்திலாவது கொடுக்க வேண்டும் என்கிற கருத்தை அன்கிட் ஜோஷி மிக வலிமையாக முன் வைத்திருப்பது பாராட்டப்பட வேண்டிய விஷயம். 

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com