இந்த ஆஞ்சநேயர் சிலையின் உயரம் இத்தனை அடியா?

துணுக்குகள்
paritala anjaneya temple
paritala anjaneya temple
Published on

* விஜயவாடாவில் இருந்து 10 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பரிதாளா என்ற ஊரில், சாலை ஓரத்தில் ஆஞ்சநேயர் சிலை உள்ளது. இந்த ஆஞ்சநேயர் சிலையின் உயரம் 135 அடி ஆகும். இவரை மேலே ஏறிச் சென்று தரிசிக்க இரு பக்கங்களிலும் படிகள் உள்ளன. இங்கு சிவன் ராமர் சன்னதிகளும் உள்ளன. கோவிலை சுற்றி அழகான பூங்காவும் உண்டு.

* திருவாரூர் மாவட்டம் திரு வலிவலம் தளத்தில் எழுந்தருளியுள்ள இறைவன் பெயர் மனத் துணை நாதர். அம்பாள் மழையொன் கன்னி. மாணிக்கவாசகர், மனத் துணையே என் வாழ் முதலே என்றும், வள்ளலார் அன்பருக்கு இன்னருள் செய்திங்கே வலி வலத்து சுன் முடியே என்றும் போற்றியுள்ளனர். அப்பர் மனத்துலானே என்றும் நன்னுடையார் மனத்தைப்பினில் வைப்பை நானூறு முறை அழைத்து அருள் புரிவானை என்று சுந்தரரும் பாடியுள்ளனர். மனக்கவலை, விரக்தி இவற்றை தீர்த்து வைப்பதால் இறைவனுக்கு மனத்துணை நாதர் என்ற பெயர் வந்தது.

kukke shri subramanya temple
kukke shri subramanya temple

* கர்நாடக மாநிலத்தில், மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள அடர்ந்த காட்டில் குமார மலையில் அழகான குக்கி சுப்ரமண்யா எனும் கிராமத்தில் அமைந்ததுதான் குக்கி சுப்ரமணியசுவாமி கோயில். இங்கு, கோயிலின் முன் மண்டபத்திற்கும் கர்ப்பகிரகத்திற்கும் நடுவே அமைந்திருக்கும் கருடனின் வெள்ளித்தூணை வலம் வந்து, வெள்ளித்தூணில் பொதிந்துள்ள கருடனை வழிபட்டால் சர்ப்பங்கள் வெளிவிடும் விஷத்தை எதிர்கொள்ள முடியும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

* காசி விஸ்வநாதர் கோவில் மாலை வழிபாட்டின் போது, சப்தரிஷி பூஜை சமயத்தில் தினமும் வில்வ தளங்களில் சந்தனத்தால் ராம நாமம் எழுதி விஸ்வநாதருக்கு சமர்ப்பிக்கின்றனர்.

* திருப்பதியில் வெங்கடாஜலபதிக்கு சிவனுக்கு உகந்த திருவாதிரை நாளில் வில்வ தளங்களால் அர்ச்சனை செய்கிறார்கள்.

andalakkum aiyan perumal temple
andalakkum aiyan perumal temple

* சுவாமிமலை அருகே உள்ள திரு ஆதனூர் என்னும் தளத்தில் எழுந்தருளியுள்ள பெருமாள், கையில் ஏட்டுச்சுவடி எழுத்தாணியுடன் காட்சி தருகிறார். கணக்கு எழுதும் நிலையில் இவர் இருப்பதால், ஆண்டளக்கும் ஐயன், படியளக்கும் பரந்தாமன் என்று அழைக்கப்படுகிறார்.

* கும்பகோணம் நாகேஸ்வர ஸ்வாமி கோவிலில் உள்ள நடராஜர் சன்னதியில் நடராஜர் ஆனந்த தாண்டவம் ஆட, அம்பாள் தாளம் போட, கண்ணன் புல்லாங்குழல் வாசிக்கிறார்.

* மதுராந்தகத்தில் இருப்பது போலவே, திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூரிலும் ஏரி காத்த ராமர் கோவில் உள்ளது. ராமர் ஆறடி உயரத்திற்கு மேல் காட்சி தருகிறார். சீதை, லட்சுமணன் சிலைகளும் உள்ளன. அவர்களுக்கு எதிரே இரண்டு பெரிய நிலைக் கண்ணாடிகள் வைக்கப்பட்டுள்ளன. ஒரு கண்ணாடியில் பார்த்தால் ராமரும், சீதையும் மட்டும் தெரிகின்றனர். இன்னொன்றில் ராமரும் லட்சுமணனும் மட்டும் தெரிகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com