என் பெயரை அச்சில் ஏற்றி மகிழ்ச்சிக் கூத்தாட வைத்தது மங்கையர் மலர்தான்.

என் பெயரை அச்சில் ஏற்றி மகிழ்ச்சிக் கூத்தாட வைத்தது மங்கையர் மலர்தான்.

Published on

ங்கையர் மலர் என்று நினைக்கும் பொழுதே மனதுக்குள் மகிழ்ச்சி மலர்கிறது! இதழ் வெளிவந்த நாள் முதல் பின்தொடரும் வாசகிகளில் நானும் ஒருத்தி.

வருடக்கணக்கில் வாசகியாக மட்டுமே இருந்த எனக்கு படைப்புகளில் பங்குபெற ஆசை வந்து "சொல்ல விரும்புகிறோம்" பகுதிக்கு கடிதம் எழுதினேன். முதன் முதலில் என் பெயரை அச்சில் ஏற்றி மகிழ்ச்சிக் கூத்தாட வைத்தது மங்கையர் மலர்தான்.

பின் ஒவ்வொரு பகுதியாக பங்கேற்க ஆரம்பித்தேன். அன்பு வட்டத்தில் நுழைந்து அனு மேடமின் திறமைமிக்க பதில்களைப் பெற்று வானில் மிதந்தேன். ஒரு வார்த்தை பல பிரச்னைகளுக்கு தீர்வாயிற்று. குமாரி சச்சு சந்திப்பு மறக்க முடியாதது. பலவிதமான போட்டிகளில் கலந்து கொண்டு எண்ணற்ற பரிசுகள் பெற்றுள்ளேன். குறிப்பாக, புடைவைகள் (புடவைகள்)! அவற்றை உடுத்தும்பொழுது ஆத்மார்த்தமான தோழியின் ஸ்பரிசத்தை உணர்கிறேன், இன்றும்! மொத்தத்தில் மங்கையர் மலர் என் வாழ்வில் இணக்கமான இணைப்பாகி விட்டாள்.

மறுபடியும் அச்சு வடிவில் கைகளில் தவழவிட பெரிதும் விரும்புகிறேன். எண்ணம் ஈடேறுமா??

logo
Kalki Online
kalkionline.com