காதலுக்காக இளவரசி பட்டத்தை துறந்த ஜப்பான் இளவரசியின் கதை தெரியுமா?

Princess Mako's
Princess Mako's i.guim.co.uk

ண்மையான காதல் எந்த எல்லையை வேண்டுமானாலும் தாண்டும் என்று சொல்வார்கள். பணம், அழகு, ஜாதி, மதம் என்று எல்லாவற்றையும் தாண்டி வரும் காதலை பார்த்திருப்போம். ஆனால் அப்படிப்பட்ட உண்மையான காதல் இந்த காலத்தில் சாத்தியம் தானா? இதெல்லாம் சினிமாவில் மட்டும் தான் நடக்கும் என்று நினைப்பவர்களுக்காக தான் இந்த பதிவு.

அப்படிப்பட்டஒரு உண்மை காதல் கதை ஜப்பானில் நிகழ்ந்திருக்கிறது. ஜப்பானிய இளவரசியான மாக்கோ 2012ல் வெளிநாட்டிற்கு படிக்க செல்லும் போது தான் தன்னுடைய காதலனான கெய் கோமுரோவை முதன் முதலில் சந்தித்திருக்கிறார். கண்டவுடன் காதல் மலர்ந்து விட்டது இருவருக்குமே!

மாக்கோ 2017ல் தன் காதலனுடனான நிச்சயத்தை அறிவித்தார். அக்டோபர் 2022ல் தன்னுடைய காதலனை திருமணம் செய்து கொள்கிறார். ஜப்பானின் அரச குடும்ப வழக்கப்படி, அரச குடும்பத்தில் இருக்கும் யாரேனும் சாதாரண மக்களை திருமணம் செய்ய வேண்டுமென்றால், தன்னுடைய அரச பதவியை துறந்துவிட வேண்டும் என்ற விதியிருக்கிறது.

அதுப்படி மாக்கோ தன்னுடைய காதலனான கெய் கோமுரோவை கரம் பிடிப்பதற்காக தன்னுடைய இளவரசி அந்தஸ்த்தை துறந்துவிட்டு அவரை திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமில்லாமல் தன்னுடைய திருமணத்திற்கு அரச குடும்பத்திலிருந்து தனக்கு பாரம்பரியமாக வர வேண்டிய பணமான 1.3 மில்லியன் டாலரையும் வேண்டாம் என்று கூறிவிட்டார் என்பதும் ஆச்சர்யமான விஷயமே!

“நாங்கள் புது வாழ்க்கையை துவங்க போகிறோம். இதில் இடையூறுகள் வந்தாலும் எதிர்க்கொள்வோம்” என்று மாக்கோ கூறியுள்ளார். மாக்கோதன்னுடைய கணவர் கேயுடன் டோக்கியோவை விட்டு நியூயார்க்கு குடிபெயர்ந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் இவர்கள் திருமணம் செய்து கொள்வதற்கு அரச குடும்பம் முதலில் ஒப்புதல் தர மறுத்துவிட்டது. பின்பு 2020 மாக்கோவின் தந்தை அக்சினோ இவர்களுக்கு பச்சை கொடி காட்டினார்.

பல பிரச்சனைகளை தாண்டி 26 அக்டோபர் 2021ல் இருவரின் திருமணமும் இனிதே நடைப்பெற்றது. இது போன்று அரச குடும்பத்தினர் சாதாரண மனிதர்களை திருமணம் செய்து கொள்வது இது முதல் முறை அல்ல. இளவரசி சயோக்கோ, நோரி போன்றவர்களும் காதலுக்காக அரச பதவியை துறந்தவர்கள் தான் என்பது கூறிப்பிடத்தக்கது.

ஜப்பானின் அரச விதிப்படி பதவியை இழந்தவர்கள் தன்னுடைய குடும்பத்துடன் சேர்ந்து வாழ கூடாது என்பது ஜப்பானின் அரச விதிமுறைகளில் ஒன்றாகும். இதனால் மாக்கோ தன்னுடைய கணவருடன் தனிக்குடித்தனம் சென்றுவிட்டார். தற்போது கெய் கோமுரோ நியூயார்க்கில் வக்கிலாக பண்ணியாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:
கரப்பான் பூச்சிக்கும், CRYPTO CURRENCY க்கும் என்ன உறவு?
Princess Mako's

இந்த நூற்றாண்டிலும் இப்படியொறு காதல் இருக்கிறது என்பது பலரை ஆச்சர்யப்படுத்தினாலும். காதலுக்காக கடைசி வரை நின்று போராடினால் நிச்சயம் மகிழ்ச்சியான முடிவு கிடைக்கும் என்பதற்கு மாக்கோவும் கெய் கோமுரோவும் ஒரு சிறந்த உதாரணமாக திகழ்கிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com