கல்லீரல் தானம்

	கல்லீரல் தானம்
Published on

- ஜி.எஸ்.எஸ்.

    த்தரப்பிரதேச மாநிலத்தில் சிறுவன் ஒருவன், நோய்வாய்ப்பட்டு உயிருக்குப் போராடும் தன்னுடைய தந்தைக்கு, தன் கல்லீரலை உறுப்பு தானம் செய்வதற்காக உச்ச நீதிமன்றத்தை நாடியிருக்கிறான்.

       கல்லீரல் தானம் செய்ய விரும்பும் சிறுவன் மைனர் என்ற காரணத்தினால் அவன் உறுப்பு தானம் செய்யமுடியுமா என்ற கேள்வி  எழுந்துள்ளது.

       சிறுவனின் சார்பாக வாதாடிய வழக்கறிஞர், “சிறுவனின் தந்தை மிகவும் ஆபத்தான நிலையில் இருக்கிறார். அவரின் உயிரைக்காப்பற்ற வேண்டுமெனில் உறுப்பு தானம் செய்வதே ஒரே வழி” என்று தெரிவித்தார்.

       மனுதாரரால், உறுப்பு தானம் செய்வது சாத்தியமா என்பது குறித்த சோதனைகளை மேற்கொள்ளலாம் என்றும் நீதிமன்ற அமர்வு தெரிவித்திருக்கிறது.

       சிறுநீரக தானம் குறித்து பலருக்கும் விழிப்புணர்வு உண்டு. ஆனால், கல்லீரல் தானம் குறித்து பலருக்கும் தெரிவதில்லை.  கல்லீரல் தானம் குறித்த சில விவரங்களை அறிந்துகொள்வோம்.

ம் வயிற்றுப் பகுதியில் உள்ள மிகப்பெரிய உறுப்பு கல்லீரல்தான்.  சுமார் ஆயிரத்து 500 கிராம் எடை கொண்டது இது. மொத்த உடல் எடையில் இரண்டு சதவிகிதம் எனலாம்.

       ஒட்டுமொத்தமாக கல்லீரல் என்று குறிப்பிட்டாலும் அது எட்டு பாகங்கள் கொண்ட ஓர் உறுப்பு என்று மருத்துவம் கூறுகிறது.

       கல்லீரல் பலவிதங்களில் செயல்படுகிறது.  உடலுக்கு சக்தி கொடுப்பது இதுதான் என்று கூடக் கூறலாம்.  நம் உணவுப் பொருள்களை நம் வளர்ச்சிக்குத் தேவையான வேதியல் பொருட்கள் ஆக மாற்றுவது கல்லீரல்தான்.  நம் உடலில் உருவாகும் ஆபத்தான பொருள்களைக் கல்லீரல் வெளியேற்றுகிறது.  கொழுப்பு மற்றும் வைட்டமின்களை உடல் உறிஞ்சிக்கொள்வதற்கு தேவையான சத்துக்களைக் கல்லீரல் உருவாக்குகிறது.  தசைகள் வளர்ச்சி பெறுவதற்குத் தேவையான புரதங்களை கல்லீரல் உற்பத்தி செய்கிறது.  ஹார்மோன்களைச் சீராக வைத்திருக்கிறது.  முக்கியமான வைட்டமின்களைச் சேமித்து வைக்கிறது.

       ல்லீரல் பழுதடைவதற்கு மதுப்பழக்கம் ஒரு முக்கியக் காரணம்.  சில வைரஸ்கள் காரணமாகவும் கல்லீரல் பாதிக்கப்படலாம்.  சில வகை மஞ்சள் காமாலையால் நீண்டநாள் தொற்று ஏற்படும்போது கல்லீரல் பழுது அடையக்கூடும்.  சிலருக்குப் பிறவியிலேயே கல்லீரலில் குறைபாடு இருக்கலாம்.

       கல்லீரல் திடீரென்று பழுதடைந்து விடுவதில்லை.  ஏதோ ஒரு குறைபாடு தொடர்ந்து இருக்கும்போதுதான் கல்லீரல் பழுதடைகிறது.

       இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் ஒரு லட்சம் பேர் கல்லீரல் செயல் இழப்பினால் பாதிக்கப்படுகிறார்கள்.

       1967ல் முதன்முறையாக கல்லீரல் மாற்றம் நடைபெற்றது.  அதன்பிறகு கல்லீரல் மாற்றங்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே வருகிறது.  தொடக்கத்தில் இறந்தவர்களின் கல்லீரலை மட்டுமே பிறருக்குப் பொருத்த முடியும் என்று சட்டம் இருந்தது.  பின்னர் உயிரோடு இருப்பவர்களின் கல்லீரலின் ஒரு பகுதியைத் தானமாக தர முடியும் என்று அந்த சட்டம் திருத்தப்பட்டது.

ல்லீரலால் வெகுசீக்கிரம் தன்னைப் புதுப்பித்துக் கொள்ள முடியும்.  இதனால்தான் உயிரோடு இருப்பவர்கள் கல்லீரல் தானம் செய்ய முடிகிறது. இழந்த கல்லீரல் பகுதி மீண்டும் காலப்போக்கில் வளர்ந்துவிடும்.

       புதிதாக கல்லீரல் தானம் பெற்றவர்கள் கணிசமாக முப்பது வருடங்கள் தாண்டியும் ஆரோக்கியமாக இருப்பதுண்டு. 

       (சிறுநீரகம் போலவே) கல்லீரல் தானம் அளிப்பவர் உறவினராக இருப்பது நல்லது.  இருவரது ரத்த வகைகளும் ஏற்புடையதாக இருக்க வேண்டும்.  18 வயதுக்கு மேலாகவும் 55 வயதுக்குக் கீழாகவும் இருக்கவேண்டும்.  மிக அதிக பருமனாக இருக்கக் கூடாது.

       கல்லீரல் தானத்தில் உள்ள பெரிய ரிஸ்க் என்பது தானம் அளிப்பவருக்கு ஏற்படக்கூடிய சிக்கல்கள் அல்ல.  புதிய  கல்லீரலைச் சில சமயம் தானம் பெறுபவர்களின் உடல் அதை ஏற்றுக்கொள்ளாமல் போகலாம். 
வெளிப் பொருள் நுழையும்போது நோய் எதிர்ப்பு மண்டலம் அதற்கு எதிராகச் செயல்படும்.  பொருத்தப்பட்ட கல்லீரல் பகுதியை இந்த விதத்தில் சில உடல்கள் எதிர்க்கக்கூடும். இந்த எதிர்ப்பைச் செயலிழக்க வைக்க மருந்துகள் உண்டு.  ஆனால், சோதனை என்னவென்றால் இந்த மருந்துகள் நோய் எதிர்ப்புச் சக்தியைப் பலவீனமடையச் செய்வதால் நோயாளிக்குப் பல தொற்றுகள் உண்டாகலாம்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com