கஷ்டத்திலிருந்து நம்மை காப்பாற்றும் கந்த சஷ்டி கவசம்

கஷ்டத்திலிருந்து நம்மை காப்பாற்றும் கந்த சஷ்டி கவசம்
Published on

கவசம் என்றால் நம்மைக் காப்பாற்றக்கூடிய ஒன்று. போரில் யுத்த வீரர்கள் தன் உடல் காத்துக் கொள்ளக் கவசம் அணிந்து கொள்வார்கள்.

இங்கு கந்த சஷ்டி கவசம் நம்மைத் தீமைகளிலிருந்தும் கஷ்டத்திலிருந்தும் காப்பாற்றுகிறது. இதை அருளியவர் ஸ்ரீதேவராய சுவாமிகள், பெரிய முருக பக்தர், ஒவ்வொரு மூச்சிலும் முருகனையே சுவாசித்தார்.

அவர் மிகவும் எளிய முறையாக நமக்கு கவசம் அளித்துள்ளார். தினம் காலையிலும் மாலையிலும் ஓத அதுவும் பல தடவைகள் ஓத முருகனே காட்சி தந்துவிடுவான்.

ஆரம்பமே சஷ்டியை நோக்க என்று இருக்கிறது. சஷ்டி என்பது அமாவாசை அல்லது பூர்ணிமாவுக்கும் அடுத்து ஆறாம் நாள். ஜாதகத்தில் ஆறாம் இடம் ரோகம், கடன், விரோதம், சத்ரு போன்றவைகளைக் குறிக்கும். செவ்வாய் ரோகக் காரகன். இந்த எல்லா தோஷத்தைப் போக்கும் பெருமான் திருமுருகப் பெருமான்.

அவருக்கு உகந்த நாள் சஷ்டி, சஷ்டி என்றால் ஆறு, முருகனுக்கோ ஆறு முகங்கள், சரவணபவ என்று ஆறு அட்சரம், ஆறு படை வீடுகள், ஆறு கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டவர், நாம் அந்தத் திருவடியை விடாது பிடித்தால் மேலே சொன்ன ஒரு கெடுத்தலும் அண்டாது. வீட்டில் கடன், வியாதி, சத்ரு பயம் இல்லை என்றால் அமைதிதானே.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com