கவிதை: கண்ணாடிக் கனவுகள்!

கவிதை: கண்ணாடிக் கனவுகள்!

கவிதை
Published on

இலக்கியம் காலத்தைக் காட்டும் கண்ணாடியாய்

இலக்கினை இயல்பாய் எடுத்து உரைத்திடும்.

இலக்கோடு வாழ்ந்திட கனவு காணுங்கள்.

இலக்கின்றி வாழ்வோர் நடைபிணத்திற்கு ஒப்பு.

கனவு ஒன்றெனில் காணலாமதை நனவில்.

கனவுகளை அடுக்கிட அவை சரிந்திடும்

உடைந்து சில்லு சில்லாய்ச் சிதறுமுன்

 உன் ஆற்றலுக்கு ஏற்றதைத் தேர்ந்தெடு.

அல்லும் பகலும் ஓய்வின்றி உழைத்திடு.

தன்னம்பிக்கையோடு உன்ஆற்றலை வளர்த்திடு.

உன்னால் முடியுமென்று உன்னை நீயே நம்பிடு.

தன்னாலே நடக்கும் என்று சோம்பிடாதே.

மனதினில் நேர்மறை எண்ணங்களை வளர்த்திடு.

மனதினில் தோன்றும் சலிப்பினை அகற்றிடு.

தொடர்ந்து தோல்வி வரினும் துவளாதே

தொடர் வெற்றிக்கு அதுவே வழி காட்டும்.

காலம் உன்னைப் பொன்னேட்டில் குறித்திடும்.

காலம் கடந்தும் நீ இசையோடு வாழலாம்.

logo
Kalki Online
kalkionline.com