

சிலருக்குக் கடந்தகால நினைவுகள் உயிரோட்டமாக அப்படியே நிலைத்து விடுகின்றன. பூர்ணத்தின் வாழ்க்கையிலும் அப்படி ஒரு நிகழ்வு நடந்தது...
16 வருடங்களுக்கு முன்... “இத மொதல்லே சொல்றதுதான் நல்லது. உங்க குழந்தைக்கு ‘கான்ஜெனிடல் ப்ரைன் மால்ஃபர்மேசன் டிசிஸ்’ இருக்கு! அதாவது... மூளைக் குறைபாட்டு நோய். இதுவந்து ஆயிரத்தில ரெண்டு குழந்தைக்குத்தான் இப்படி நடக்கும். இந்த நோயால குழந்தைக்கு கை - கால் ஒழுங்கா செயல்படாம, ஒழுங்கா பேச முடியாம, சரியா சுவாசிக்க முடியாம-ன்னு பல பிரச்னைகள் வரலாம்..! குழந்தை வளர வளர உங்களுக்குத்தான் பெரிய பிரச்னையா இருக்கும். அதனால இந்தக் குழந்தை வேணுமாங்கிறத நீங்கதான் முடிவு பண்ணணும்” என்று மதியழகனிடம் டாக்டர் கூறுகிறார்.
பதறிக்கொண்ட மதியழகன், “டாக்டர், குழந்தையக் காப்பாத்த முடியாதா?”