கார்த்திகை தீபத்தன்று விளக்கை எந்த திசையில் ஏற்ற வேண்டும் தெரியுமா?

திருக்கார்த்திகை தினமான நாளைய தினம் இந்த விஷங்களை செய்வது செல்வ செழிப்பை உண்டாக்கும் என்பது ஐதீகம்.
Karthigai deepam
Karthigai deepam
Published on
mangayar malar strip
mangayar malar strip

நாளை (டிசம்பர் 3-ம்தேதி) அனைவரது வீடுகளிலும் திருகார்த்திகை நாள் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் இந்த விஷங்களை செய்வது செல்வ செழிப்பை உண்டாக்கும் என்பது ஐதீகம்.

டிசம்பர் 3-ம்தேதி திருகார்த்திகை திருநாள் சாதாரண நாள் கிடையாது. இந்த நாள் தீபத்தில் எரியும் ஒளி, செல்வ அதிர்ஷ்டத்தையும், தடைகளை விரட்டும் சக்தியையும் கொண்ட நாள்.

நாளை திருக்கார்த்திகை நாளன்று கட்டாயம் அனைவரின் வீட்டிலும் மாலையில் விளக்கு ஏற்ற வேண்டும். விளக்கு வைத்த பிறகு வீட்டை பூட்டி விட்டு வெளியில் செல்லக்கூடாது.

அதேபோல் பால், வெல்லம், அரிசி, பருப்பு, எண்ணெய், மஞ்சள் ஆகிய பொருட்களை வீட்டில் விளக்கு வைத்த பின் சென்று வாங்கி வரக்கூடாது. இந்த பொருட்களை கடையில் பணமில்லாமல் கடனாகவும் வாங்கி வரவும் கூடாது.

இதையும் படியுங்கள்:
நாளைய தினம்... தவறவிடக்கூடாத கார்த்திகை சஷ்டி வழிபாடு! அடுத்த சஷ்டிக்குள் நினைத்தது நடக்கும்...
Karthigai deepam

நாளைய தினம் உங்கள் வீடுகளில் உள்ள எந்த ஒரு அறைகளும், இருட்டாக இருக்கக்கூடாது. ஒரு விளக்காவது இரவு முழுவதும் எரிய வேண்டும்.

மாதவிடாய் ஆன, பெண்கள் வீட்டில் குழந்தைகளை வைத்து விளக்கு ஏற்றிக்கொள்ளுங்கள்.

வீடுகளில் தீட்டு இருந்தால் 16 நாட்கள் கழிந்திருந்தால் மட்டுமே விளக்கு வைக்க வேண்டும்.

நாளை வீட்டு வாசலில் கட்டாயம் ஒரு விளக்கு வைக்க வேண்டும்.

முருகப்பெருமான் சரவணபொய்கையில் ஆறு குழந்தைகளாக தோன்றி கார்த்திகை பெண்கள் என்ற ஆறு தாய்மார்களால் வளர்க்கப்பட்டார். இந்த நட்சத்திரம் முருகப்பெருமானுக்கு உகந்த நட்சத்திரமாகும். நாளை கார்த்திகை தீபம் ஏற்றி முருகனை வழிபடுவதால் அவர் அருளால் வாழ்வில் உள்ள தடைகள் நீங்கி மங்களம் மற்றும் சுபம் நிலைக்கும் என்பது ஐதீகம்.

கார்த்திகை தீபத்தன்று மகாலட்சுமி கடாட்சம் பெற 10 ரூபாய் கொடுத்து வாங்க வேண்டிய பொருட்கள் என்னவென்று அறிந்து கொள்ளுங்கள்.

முதலாவதாக அகல் விளக்குகள் கார்த்திகை தீபத்திற்கு ஏற்ற, புதிய அகல் விளக்குகள் வாங்குவது மிகச் சிறந்தது. இது மகாலட்சுமிக்கு உகந்தது.

இரண்டாவதாக திரிகள், தீபம் ஏற்ற திரிகள் அவசியம். இது மகாலட்சுமியின் அருளை பெற உதவும் என்று நம்பப்படுகிறது.

மூன்றாவதாக மஞ்சள் அல்லது கும்குமம். இவை மங்களப்பொருட்கள். நிலைப்படியில் அல்லது பூஜை அறையில் வைக்கலாம்.

நான்காவதாக மகாலட்சுமியின் அம்சமாக கல் உப்பை கார்த்திகை தீபத்தன்று புதிதாக வாங்கி வைத்தால் செல்வம் பெருகும் என்ற நம்பிகை உண்டு.

அதேபோல் கார்த்திகை தீபத்தன்று விளக்கை எந்த திசையில் ஏற்ற வேண்டும் என்று தெரியுமா?

பூஜை அறையில் அனைத்து விளக்கையும் ஏற்றி அதற்கு பூஜை செய்த பிறகு அந்த விளக்கை மற்ற இடங்களில் வைக்க வேண்டும்.

தீபத்தை வடக்கு திசை நோக்கி ஏற்றினால் அறிவும் செல்வமும் வளரும்.

கிழக்கு திரையில் ஏற்றுவது துன்பங்களை நீக்கும்.

மேற்கு திசையில் ஏற்றுவது கடன் தொல்லைகளையும் தோஷங்களையும் போக்கும்.

தெற்கு திசையில் தீபங்களை ஏற்றக்கூடாது.

கார்த்திகை தீபத்தன்று தீபம் எரியும் நேரத்தில் உங்கள் மனதில் வேண்டுதல் வைத்தால் அதற்கு உடனடி பலன் கிடைக்கும் என்று சித்தர்கள் கூறுகின்றனர். அதேபோல் அந்த நேரத்தில் 3 விஷயம் செய்தால், நெருக்கடியான இருந்த பணப்பிரச்சனைகள் கூட தீரும்.

முதலாவது, வீட்டில் கிழக்கு திசையில் விளக்கு ஏற்ற வேண்டும். இது செல்வ சக்தியை இழுத்து வருவதற்காக சின்னம்.

2-வது 11 முறை ‘ஓம் தீப நாராயணாய நமஹ’ என்ற மந்திரத்தை ஜபம் செய்ய வேண்டும். இது தடைகளை கரைக்கும் சக்தி.

3-வது உங்களால் முடிந்த அன்னதானம் அல்லது பண உதவி செய்ய வேண்டும். அப்படி முடியாதவர்கள் ஒரே ஒரு ரூபாயை கூட அன்னதானம் அல்லது உதவியாக பக்கத்தில் இருக்கும் நபருக்கு கொடுக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
கார்த்திகை தீப மகிமை: பரணி தீபம் முதல் பௌர்ணமி வரை வழிபாட்டு முறைகள்!
Karthigai deepam

தீபம், மந்திரம், தானம் இந்த மூன்றும் சேர்ந்து செல்வம் பெருகுவதற்கான வாய்ப்பை திறக்கும் வழி என்று சித்தர்கள் கூறுகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com