

வீட்டின் அழைப்பு மணி ஒலித்தது. ஈசி சேரில் நிம்மதியாக சாய்ந்து புத்தகம் படித்துக்கொண்டிருந்த நான், மெல்ல எழுந்தேன். மீண்டும் அழைப்பு மணி. "யாருடா இவன் அவரசக்காரன். எழுந்து திறப்பதற்குள் இத்தனை தடவ அடிப்பானா" என்று கோபத்துடன் வாயிலில் சென்று கதவை திறக்க என் கண்களை என்னால் நம்பவே முடியவில்லை.
"ஏய்..! தினேஷ்" என்று நான் அவனை கட்டிப்பிடிக்கவும் அவனும் கண்களில் நீர் மல்க என்னை கட்டிப்பிடித்து ஆனந்த கண்ணீர் விட்டான்.
"டேய் என்னடா திடீர்னு..?" என்றேன் நான்.
"ஆமான்டா.. ரொம்ப யோசனைக்கு பிறகு திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து விட்டேன்," என்றவன் பத்திரிகையை நீட்டினான். நான் அதை வாங்கினேன். ஆனால் படிக்க வில்லை.
உடனே, "வாடா உள்ளே போகலாம்" என்று அழைத்து அவனுக்கு நானே காப்பியும் போட்டுக்கொடுக்க ஏற்பாடு செய்தேன்.