

அன்று மாலையும் துர்கா சந்திரமுகியாகவே மாறி இருந்தாள்.
அலுவலகம் முடித்து, களைப்புடன் திரும்பிய கணேசனுக்கு, முன்பெல்லாம் வரவேற்று ஆற அமரச் சொல்லி, காபி எடுத்து வைத்த துர்கா, இப்போது அவனைக் கண்டும் காணாமல் இருந்தாள்.
துர்காவின் முகத்தில் ஒரு கடுமை இருந்தது. கண்கள் சிவந்திருந்தன. கணேசன் வேட்டிக்கு மாறி, முகத்தை கழுவிக் கொண்டு, கூடத்தில் இருந்த நவாப் நாற்காலியில் அமர்ந்து, அன்றைக்கு வந்த தினசரியை புரட்டினான். முன்பெல்லாம், அவனுக்கு அங்கு வந்த காபி இப்போது வரவில்லை. துர்காவை 'நோக்கிய'போது, அடுக்களையில் மும்முரமாக ஏதோ செய்து கொண்டிருந்தாள். கணேசனுக்கு துர்காவிடம் கேட்க கொஞ்சம் பயமாக இருந்தபோதும், தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, மிகவும் பணிவாக கேட்டான்.
"து... துர்கா. என்ன ரொம்ப பிசியாக இருக்கியா?"
"பாத்தா தெரியல. பிள்ளைங்களுக்கு ஸ்கூலுக்கு நாளைக்காக ஸ்னாக்ஸ் ரெடி பண்ணிகிட்டு இருக்கேன்."