கவிதை - ஆடியிலே சேதி சொல்லு!

kavithai...
kavithai...
செ. கலைவாணி

செ.கலைவாணி ஓய்வுபெற்ற தமிழாசிரியை 'சிதறிய பரல்கள் கவிதை நூல்' அடர்வன மின்மினி துளிப்பா நூல் கலையும்கைவண்ணமும் கைவினை நூல் இம்மூன்று நூல்களை வெளியிட்டுள்ளேன் என் கவிதைகள் தொகுப்பு நூல்களிலும் இடம் பெற்றுள்ளன முன்னணி பெண்கள் மாத வார மின்னிதழ்களில் முன்னணி செய்தித்தாள்களில் எனது கைவேலைகள் குறித்து செய்திகள் வந்துள்ளன. துளிப்பா பேரிகை விருது கவிப்பறவை விருது சதகக்கவிஞர் விருது கவித்தென்றல் விருது போன்று பலவிருதுகள் வாங்கியுள்ளேன். என் மூச்சுக் காற்றே தமிழன்னை தான் வாழ்நாள் முழுவதும் தமிழன்னைக்குக் கவிதையாரம் சூட்டுவதே என்பணி.

Updated on

தவனின் சுற்றுவட்டம்

ஆடியில் மாற்றம்.

உழவுக்கு நன்மை

உழுவோர்க்குப் பெருமை.

கோடை யகலும்

காரது பொழியும்.

பருவமழை பொழிவு

புதுப்புனல் பெருக்கு.

உயிர்கட்கு ஆதார

உயிர்வளி அதிகரிப்பு.

காற்றால் நாளும்

கிருமிகள் வருகை.

தொற்று பெருகும்

தொடர்ந்தே அழிக்கும்.

நோய் எதிர்ப்பாற்றல்

மெய்யில் பெருகிட

கூழை நாமே

கூடிக் குடிப்போம்.

வேப்பந் தழையை 

வீட்டில் சொருகுவோம்.

வேப்பங் கொழுந்தை

விரைந்தே உண்போம்.

காவல் தெய்வங்களைக்

காதலோடு வணங்குவோம்.

அம்மனை வணங்கியே

அருளைப் பெறுவோம்.

எளிதில் செரிக்கும்

எளியஉணவை உண்போம்.

கோவில் திருவிழா

கொண்டாட்ட நிகழ்வுகள்.

மனதைப் பலப்படுத்தும்

மகிழ்வைத் தந்திடும்.

logo
Kalki Online
kalkionline.com