
உறக்கம் வந்தது!
வானில் புறப்பட்டேன்!
வேலைக்காகப் புறப்பட்ட அப்பா!
பிள்ளையைக் காண எதிர்நோக்கும் அம்மா!
மனைவியின் ஈமச் சடங்கிற்காக செல்லும் கணவன்!
வாழ்வின் பயணத்தைத் தொடங்கும் மகள்!
இதோ! சீக்கிரம் வந்துடுறேன்! பேரன்பில் திழைத்த தாத்தா!
அவரின் பேரழகில் மதியிழந்த பாட்டி!
முதல் வான் பயணம் காணும் சிறுவன்!
இன்பச் சுற்றுலா செல்லும் புதுமணத் தம்பதிகள்!
இன்னும் பற்பல!
கனவில் சிறு சலசலப்பு!
கூட்டில் பறவைகள் பரிதவிப்பு!
தலைவனுக்கோ மன அங்கலாய்ப்பு!
திரும்பா உலகைத் தெரிந்தேக் காணும் சிட்டுகள்!
ஐயோ! வாயு தேவனின் லீலையா!
மனிதனின் பிழையா!
எதிரிகளின் சூழ்ச்சியா!
சற்றென்று விழித்தேன்..
என்ன ஒரு அபாயக் கனவு!
மீளாத் துயரத்தில் ஆழ்ந்த நான் -
மீண்டும் உறக்கமற்ற நிலையில்!