கவிதை; சேரா தண்டவாளங்கள்!

Kavithai -  brother - sister relationship!
Kavithai Image
Published on

ழகிய இல்லத்தில்

அண்ணனுக்குச் செல்லமாய் அன்புத்தங்கை

‘அ’ போடக் கற்றுத் தந்தவன்,

பாவாடை நாடாக் கயிறு கட்டி விட்டவன்

சளி ஒழுகும் மூக்கையும்

சகஜமாய்த் துடைத்துவிட்டவன்

சைக்கிள் ஓட்டவும், பேருந்தில் ஏற்றியும் விட்ட

அண்ணன்

தந்தை திட்டும் போது,

தமையனுக்குப் பரிந்து பேசும் தங்கை

அண்ணன் கடன் அடைக்க

ஆபரணத்தைக் கழற்றித் தந்தவள்

அவன் காதலுக்குக்கூட தூது போனவள்.

பலகாரக் குடம் தூக்குவதிலிருந்து

தாய் மாமனாய் சீர் செய்யும்

ஆண்டாண்டு கால உறவு,

மூன்று முடிச்சு அண்ணியின்

வரவால் மாறிவிடுவதேன்?

அண்ணனையும், தங்கையையும்

சேரா தண்டவாளங்களாய் மாற்றியது எது?

- கே. மகாலட்சுமி, திண்டுக்கல்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com