
-எஸ்.பவானி, திருச்சி
பாலின் உன்னதம்
அருந்தும் கன்றுக்கு
மட்டுமே தெரியும்
கறக்கும் வியாபாரிக்கு
தெரியாது!
__________________________________
அர்த்தம்
வாடி என்று
கணவர் செல்லமாய்
அழைத்தால் கனிவு!
உரத்துச் சொன்னால்
கட்டளை!
ஒரே சொல்லின்
உச்சரிப்பு தருகிறது
மாறுபட்ட அர்த்தம்.
___________________________________
குறட்டை
அவர் அதை செலவழிக்கவில்லை
பிறருக்கு கொடுக்கவும் மனமில்லை
நாய் உருட்டும் தேங்காய் என
பணம் பாதாளத்தில் குறட்டை விடுகிறது.
__________________________________
அழுகையும் சிரிப்பும்
உயிரிழந்த பிரமுகரின்
இல்லத்தில் சோகம்
மயானத்தில்
வெட்டியானுக்கு
அமோக வருமானம்
அழுகையும் சிரிப்பும்
ஒரே நேரத்தில்.
___________________________________
பயம்
பூட்டை உடைத்து
தைரியமாய் நுழையும் திருடன்
திறந்திருந்த
வீட்டிற்குள் நுழைய
பயம் கொள்கிறான்
____________________________________
அரசியல்
காரியம் கைகூட
காலில் விழுவது
தப்பே இல்லை
என்கிறது அரசியல்
முதல் பாடம்.
___________________________________
இக்கவிதை கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகியிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே தோழிகளே!
- ஆசிரியர், கல்கி ஆன்லைன்