
“துன்பத்தில் துயரப்படுவதே
தொடர்கதையாக இருந்தாலும்...
துவண்டுபோக வேண்டாமே!”
”சிந்தித்து பார்த்திட…
சின்ன சின்ன சந்தோசங்கள்
சத்தமே இல்லாம வந்துபோன
தடயங்கள் தெரியவரும்!?”
”மன வாசலை மகிழ்ச்சியுடன்
திறந்து விடுங்கள்.!
எந்த ஒரு துன்பத்தோடும்
இந்த வாழ்க்கை இறுதி இல்லை!
வறுமையோ, வெறுமையோ!
வாழ்வில் இன்பம் வராமலே
இருக்க வாய்ப்பில்லை!
நம்பிக்கை உள்ள மனதுக்கு
வாய்ப்புகளே வெற்றிக்கான வாசல்கள்!
ஊக்கமும் உயர்ந்த எண்ணமுமே
உயர்த்திடும் ஏணிப்படிகள்!
தோல்விகள் கைப்பிடிகள்.
தளராமல் தொடர்ந்து செல்லும்
துணிவே….
உங்களின் ஊன்றுகோல்.!
வாருங்கள்! வாழ்க்கை வாழத்தானே?!