ஈரோடு மாவட்டம் சென்னிமலை பாலசுப்பிரமணியர் கோவிலில், பக்தர்கள் வீடு கட்டுவதற்காக கற்களை அடுக்கி வைத்து வேண்டுகின்றனர். வேண்டுகோள் நிறைவேறுவதாக நம்பிக்கை நிலவுகிறது. மலைக்கு செல்லும் வழியில் இடும்பன் சன்னதி உள்ளது.
கோவா மாநிலம் மற்றும் ஊரில் அமைந்துள்ள ஸ்ரீ மகேஷ் கோவிலில் பெருமாள் மோகினி அவதாரத்தில் காட்சி தருகிறார்.
திருக்கழுக்குன்றம் மலையில் எழுந்தருளியுள்ள அம்பாளுக்கு திருமலை சொக்கநாயகி, பெண்ணில் நல்லாள், அணியாது அழகிய அம்மை என்ற பெயர்களும் உண்டு. ஆபரணங்கள் ஏதும் அணியாமல் அழகுருவாக திகழ்வாள் என்பதை உணர்த்தும் பெயர்கள் இவை.
நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகில் திருகாந்தல் எனும் இடத்தில் காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது. இங்கு, இயற்கையிலேயே பூணூல் அணிந்தது போன்ற ரேகை அமைப்புடன் பாணலிங்கமாக ஈசன் காட்சி தருகிறார்.
ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் ‘டாக்கூர்ஜி ஸ்ரீநாதர்’ என்று அழைக்கப்படும், கிருஷ்ண பகவானின் ஸ்ரீநாத் துவாரகா கோவில் உள்ளது. பளிங்குக் கல்லில் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ள, இங்குள்ள கண்ணனின் மேனியில் ஒரு வகையான பசையைத் தடவி, அதில் ஆடை, அணிகலன்களை ஒட்டி வைக்கிறார்கள். ஒவ்வொரு 45 நிமிடத்திற்கும் ஒரு முறை கிருஷ்ணரின் அலங்காரத்தை மாற்றிக்கொண்டே இருக்கிறார்கள்.
திருவானைக்கோவிலில் பங்குனி மாதம் நடைபெறும் பஞ்சப்பிரகார திருவிழாவில் இறைவன் (ஜம்புகேஸ்வரர்) பெண் வேடத்திலும், இறைவி (அகிலாண்டேஸ்வரி) ஆண்வேடத்திலும் திருவீதி உலா வருகிறார்கள்.
ஆந்திர மாநிலத்திலுள்ள, பீமாவரத்தில் இருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் யனமதுரு சக்தீஸ்வரர் கோயில் உள்ளது. இந்தக் கோவிலில், இரவில்மட்டும் பெண் வேடம் தரிக்கும் கோபேஷ்வர் மகாதேவர் கிருஷ்ணரைக் காணலாம்.