கோடி நலம் தரும் கோமாதா!

கோடி நலம் தரும் கோமாதா!

பசு என்பதன் உண்மையான பொருள் தர்மத்திற்குக் கட்டுப்பட்டது என்பதாகும்.

பசுவில் வாசம் செய்யும் தேவர்கள் :

தலை - சிவபெருமான்

நெற்றி - சிவசக்தி

வலது கொம்பு - கங்கை

இடது கொம்பு - யமுனை

கொம்பின் நுனி - காவிரி, கோதாவரி முதலிய புண்ணிய நதிகள், சராசரி உயிர் வர்க்கங்கள்

கொம்பின் அடியில் - பிரம்மா, திருமால்

மூக்கின் நுனி - முருகன்

மூக்கின் உள்ளே - வித்யாதரர்கள்

இரு காதுகளின் நடுவில் - அசுவினி தேவர்

இரு கண்கள் - சூரியன், சந்திரன்

வாய் - சர்ப்பசுரர்கள்

பற்கள் - வாயுதேவன்

நாக்கு - வருணதேவன்

நெஞ்சு மத்திய பாகம் - கலைமகள்

கழுத்து - இந்திரன்

மணித்தலம் - எமன்

உதடு - உதயாத்தமன சந்தி தேவதைகள் கொண்டை - பன்னிரு சூரியர்கள்

மார்பு - சாத்திய தேவர்கள்

வயிறு - பூமி தேவி

கால்கள் - அனிலன் என்னும் வாயுதேவன்

முழந்தாள் - மருத்து தேவர்

குளம்பு - தேவர்கள்

குளம்பின் நுனி - நாகர்கள்

குளம்பின் நடுவில் - கந்தர்வர்கள்

குளம்பின் மேல் பகுதி - அரம்பையர்

முதுகு - உருத்திரர்

யோனி - சந்த மாதர் (ஏழு மாதர்)

குதம் - லட்சுமி

முன் கால் - பிரம்மா

பின் கால் - உருத்திரன், தன் பரிவாரங்களுடன்

பால் மடி - ஏழு சமுத்திரங்கள்

சந்திகள் தோறும் - அஷ்டவசுக்கள்

அரைப் பரப்பில் - பிதிர் தேவதை

வால் முடி - ஆத்திகள்

உரோமம் - மகா முனிவர்கள்

எல்லா அங்கங்கள் - கற்புடைய மங்கையர்

பசுவின் பாலில் சந்திரனும், நெய்யில் அக்னி தேவனும் இருப்பதாக சொல்கிறது வேதம்.

கன்று ஈன்ற பசுக்களுக்கு தொடர்ந்து புல் புண்ணாக்கு தானியம் போன்றவற்றை அளித்து காலையில் வணங்கி வந்தால் கொடுத்த கடன் பிரச்சனையின்றி கிடைக்கும்.

ஒருவருக்கு தீய கனவுகள் அடிக்கடி வந்து அவஸ்தைபட்டால் அதற்கு பரிகாரம் காலையில் பசுவின் தொழுவத்திற்கு சென்று வாழைப்பழம் கொடுத்து வழிபட்டால் சுகம் கிடைக்கும்.

நன்றாக மேய்ந்து வீடு திரும்பக் கூடிய பசுமாடுகளின் குளம்படி பட்டு கிளம்பக் கூடிய தூசி, கிளம்பக் கூடிய வேளையை நல்ல வேளையாக பார்க்கப்படும் (கோதூளி லக்னம்) என முகூர்த்த சாஸ்திரம் கூறுகிறது. பசுவின் பாதம் பட்ட இடம் பரிசுத்தமாகும் என்பதால் தான் புதுமனை புகுவிழாவில் பசுவும் கன்று குட்டியும் முதலில் அழைத்துச் செல்லப்படுகிறது. இதனால் புதுமனையில் இருக்கும் பிரச்சினைகள் எதுவாக இருந்தாலும் நீங்கி தூய்மை உண்டாகும்.

பசுவின் கால்பட்ட தூசியைத்தான் ரகு சக்ரவர்த்தி, அஜ சக்ரவர்த்தி, தசரதச் சக்ரவர்த்தி போன்ற ராஜாதி ராஜாக்கள் எல்லோரும் பூசிக்கொண்டார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com