Published on:
பூச்சூடி நடக்கிறாள்
பின்தொடர்கிறது
பொன் வண்டு
சிறைபட்ட வாழ்க்கையை
அடித்துச் சொல்கிறது
ஆலய மணி
மனிதர்களை
அங்கீகரிக்கின்றன அன்பால்
பூனையும் நாயும்
பருந்தின் நிழல்
குளத்தில் விழுந்தது...
அச்சத்தில் மீன்கள்
மண்ணுக்கு
குடை பிடிக்கிறதா
மரத்தின் நிழல்?
Kalki Online
kalkionline.com