
என் நண்பரின் மகள் பெயர் ஹரிணி இவன் ஒரு திருமணத்துக்குச் சென்றிருந்தபோது மணமகளை விதவிதமாக போட்டோ எடுப்பதை பார்த்து விட்டு வீட்டுக்கு வந்து என்னையும் அதேபோல் எடுங்கள் என்று சொல்லி பயங்கர லூட்டி! அதனால், ஹரிணியை அவள் அம்மா விதவிதமாக போட்டோ எடுத்தார்.
அவற்றை நண்பர் எனக்கும் அனுப்பியிருந்தார். நான் ஹரிணியிடம் '' என்ன ஹரிணி.. திடீரென்று புகைப்படம் எல்லாம்.. சூப்பரா இருக்கு" என்றேன். அதற்கு அவள், '' ஏன் அங்கிள் கல்யாண பொண்ணைத்தான் விதவிதமா போட்டோ எடுக்கணுமா? என்னை எடுக்கக் கூடாதா?" என்றாளே பார்க்கலாம்! ஒரே லூட்டி தான்! அவள் கேட்கும் கேள்விக்கு பதிலே சொல்ல முடியாது. அந்தளவுக்கு சுட்டி பெண்.
-பொ. பாலாஜிகணேஷ், கோவிலாம்பூண்டி