என் பேரன் ஆரியனுக்கு நான் சொல்லும் கதைகள் சிலவற்றை நாடகமாக இருவரும் நடிப்போம் அந்த வகையில் அவனுக்கு பிடித்தமான ஆமையும் முயலும் கதையை அடிக்கடி நடிப்போம் எப்பவும் நான்தான் முயல்அவன் ஆமை.
அன்றும் அதுபோல விளையாட ஆரம்பித்தோம். பாதி தூரம் சென்றதும் முயலான ஆரியன் திரும்பி பார்த்து விட்டு தூங்க ஆரம்பித்தான். நான் ஆமையாச்சே. மெதுவாக நகர்ந்து வெற்றிக்கோட்டை நெருங்கும் சமயம் ஆரியன் ஓடிவந்து எனக்கு முன் கோட்டை தொட்டு விட்டான்.
நான் உடனே" ஆரியன். நீ முயல்! .நான் ஆமை .நான் தான் கோட்டை தொடனும்" என்றேன்.
"போ பாட்டி! எப்பவுமே முயல் தோத்துகிட்டு இருக்கணுமா? இந்த தடவை ஜெயிச்சிடுத்து" என்றானே பார்க்கனும்.
– ராஜலட்சுமி கௌரிசங்கர், மதுரை.