எலுமிச்சையின் தாயகம் இந்தியா. எலுமிச்சை மருத்துவ குணங்கள் நிறைந்தவை உடல் உஷ்ண வியாதிகளைத் தவிர்க்கும். ‘சிட்ரஸ் ஆசிடா’ இதன் தாவரப்பெயர்.
* வெல்லம் கரைத்த நீரில் சுக்கைத் தட்டிப் போட்டு எலுமிச்சைப் பழத்தை பிழிந்து அருந்துவது கோடை வெயிலுக்கு மிகவும் நல்லது.
* வெட்டி வேரை நீரில் ஊற வைத்து, வடிகட்டி எடுத்து தர்ப்பூசணி பழத்தைத் துண்டாக நறுக்கிப் போட்டு ஒரு முழு எலுமிச்சைப் பழத்தை பிழிந்து சாற்றை கலந்து அருந்தினால் கோடையின் எரிமலை உஷ்ணமும் பனிமலையாகும்.
* எலுமிச்சை பழச்சாறு சிறந்த காலரா தடுப்பு மருந்து. அதனால் அடிக்கடி எலுமிச்சை சாறு குடிக்கலாம்.
* கோடையில் ஏற்படும் நீர்க்கடுப்பு நீங்க, எலுமிச்சை பழச்சாறில் நல்லெண்ணெய் சம அளவு கலந்து சாப்பிட்டு வந்தால் குணமாகும்.
* பித்தம் அதிகமாக உள்ளவர்கள் நிறைய எலுமிச்சை சாறு பருக வேண்டும்.
* எலுமிச்சை சாறுடன் சோற்றுக் கற்றாழைச் சாறு கலந்து குளித்தால் உடல் குளிர்ச்சி ஏற்படும்; சரும நோய் அண்டாது.
* குளிக்கும் நீரில் ஒரு மூடி எலுமிச்சை சாறு கலந்து பிறகு அதன் தோலை உடலில் தேய்த்துக் குளித்தால் சருமப் பிரச்னைகள் ஏற்படாது.
* தினமும் இரண்டு வேளை லெமன் டீ குடித்தால் ஆரோக்கியம் நிச்சயம். பால் சேர்க்காமல் வெறும் ப்ளாக் டீயில் சிறிது எலுமிச்சை சாறு கலந்தால் அதுவே லெமன் டீ. தேவைப்பட்டால் சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம் இல்லையெனில் அப்படியே பருகலாம். உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்வு ஏற்படும்.