ஓவியம்; பிரபுராம்
“இந்த ஓட்டல்ல மாவாட்டினா ஸ்பெஷல் சலுகை உண்டு.
“என்னது?”
“நாமே தோசை சுட்டுச் சாப்பிடலாம்.
*******************************************
“தலைவர் திடீர்னு ஆஸ்பிட்டல் கட்டுறாரே ஏன்?”
“அவருக்கு டாக்டர் பட்டம் கொடுக்கிறாங்களாம்!
*******************************************
“நம்ம குருநாதர் ஏன் கோபமா இருக்காரு?”
“கமண்டலத்தில் இருந்த தண்ணியை எந்தச் சீடனோ எடுத்துக் குடிச்சுட்டானாம்.
*******************************************
“டாக்டர் அந்த ஆளுக்கு கிட்னில கல் இருக்குன்னு சொன்னதும் அவர் எதுக்கு ஜோசியர்கிட்டே போறாரு.
“ராசியான கல்லான்னு பார்க்கறதுக்குதான்...
*******************************************
“என் மனைவி விருப்பப்பட்ட ஸ்கூல்ல பையனுக்கு எல்.கே.ஜி. சீட் வாங்கிட்டேன்!
“அப்ப இத்தனை நாளா கஷ்டப்பட்டு சேர்த்தப் பணமெல்லாம் நஷ்டப்பட்டு போச்சுன்னு சொல்லு!
*******************************************
“ஆடி போய் ஆவணி வந்தா மாற்றம் வரும்னு ஜோஸ்யன் சொன்னது பலிச்சிருச்சு தலைவரே!
“என்ன, என்ன?”
“உங்களைப் புழல்ல இருந்து வேலூருக்கு மாத்திட்டாங்க!