சுண்டி இழுக்கும் சுவையில் ஊறுகாய்கள் செய்வோம் பழங்களில்...

ஊறுகாய்கள்
ஊறுகாய்கள்www.everydayhealth.com

வசரமயமான வாழ்க்கையில் ருசியாக குழம்பு வைக்க நேரமில்லையே என்று ஏங்குபவர்களுக்கு ‘கவலைப்படாதே சகோதரா’ என்று கைகொடுக்கும் ஒரே ஐட்டம் ஊறுகாய்தான்... ஜில்லுனு தயிர் சாதம். தொட்டுக்கொள்ள காரசாரமான புளிப்பும் இனிப்பும் கலந்த ஊறுகாய்... சொல்லும்போதே நாவில் நீர் ஊறுகிறதோ! இதோ சில வித்தியாசமான விறுவிறுப்பான ஊறுகாய்கள்.

அதிலும் பழங்களில் இருந்து செய்யக்கூடிய அரிய வகையில் அற்புத சுவையில்... (இந்த ஊறுகாய்களை ஒரு வாரம் முதல் 10 நாட்கள் வரை வைத்து உபயோகிக்கலாம். பிரிட்ஜிலும் வைக்கலாம். உப்பு புளி காரம் போன்றவற்றை அவரவர்களின் சுவைக்கேற்ப கூட்டியோ குறைத்தோ சேர்த்துக்கொள்ளுங்கள். ஆனால், சற்று தூக்கலாக இருந்தால்தான் ஊறுகாய் ருசிக்கும். அதுவும் உண்மை)

பேரிச்சம் பழ ஊறுகாய்

பேரிச்சம் பழ ஊறுகாய்
பேரிச்சம் பழ ஊறுகாய்www.youtube.co

தேவையான பொருட்கள்:

பேரிச்சம் பழம் - 100 கிராம்,  மிளகாய்த்தூள் - ஒரு டேபிள் ஸ்பூன்,  உப்பு - தேவையான அளவு,  எலுமிச்சம் பழச்சாறு - கால் கப்.

தாளிக்க, கடுகு - அரை டீஸ்பூன், எண்ணெய் - இரண்டு டேபிள் ஸ்பூன்.

வறுத்துப் பொடிக்க

வெந்தயம் - கால் டீஸ்பூன்,  பெருங்காயம் - அரை டீஸ்பூன்.

செய்முறை:

பேரிச்சம் பழத்தை கொட்டை நீக்கி மிகவும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும் வெந்தயத்தை வெறும் வானிலையில் வறுத்துக்கொண்டு எடுக்கும்போது பெருங்காயத்தை புரட்டி எடுத்து மிக்ஸியில் நைசாக பொடித்துக்கொள்ளவும் 

வானொலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு தாளித்து, நறுக்கிய பேரிச்சம் பழத்தைச் சேர்க்கவும். குறைந்த தீயில் மூன்று நிமிடங்கள் வதக்கவும். பிறகு எலுமிச்சம் பழச்சாறு, மிளகாய் தூள், வெந்தய பெருங்காயத்தூள் சேர்த்து மூன்று நிமிடங்கள் நன்கு கிளறி இறக்கவும். சுவையான பேரிச்சம்பழ ஊறுகாய் ரெடி.

பிளம்ஸ் ஊறுகாய்

பிளம்ஸ் ஊறுகாய்
பிளம்ஸ் ஊறுகாய்www.youtube.com

தேவையான பொருட்கள்:

துண்டுகளாக நறுக்கிய பிளம்ஸ் பழம் - ஒரு கப்,  மிளகாய் தூள் - ஒரு டீஸ்பூன்,  மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்,  வெல்லம் - ஒரு சிறு துண்டு, நல்லெண்ணெய் - ஒரு டேபிள் ஸ்பூன், கடுகு - கால் டீஸ்பூன்,  பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

அடி கனமான வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு பெருங்காயத்தூள் தாளித்து நறுக்கி வைத்துள்ள ப்ளம்ஸ் பழங்களை சேர்க்கவும். பிளம்ஸ் பழங்கள் சிறிது வதங்கியதும் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து சுருள வதங்கியதும், வெல்லம் சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும்வரை கிளறி இறக்கவும்.  சுவையில் அசத்தும் இந்த பிளம்ஸ் ஊறுகாய்.

பலாப்பழ ஊறுகாய்

பலாப்பழ ஊறுகாய்
பலாப்பழ ஊறுகாய்www.youtube.com

தேவையான பொருட்கள்:

பலாப்பழத்துண்டங்கள் – 12, மிளகாய்த்தூள் 2 டீஸ்பூன், மஞ்சள் தூள்- ½ டீஸ்பூன் , கடுகு, வெந்தயம், பிளாக் சால்ட், கருப்பு சீரகம் - தலா ஒரு டீஸ்பூன்,  கடுகு எண்ணெய் – சிறிதளவு,  உப்பு தேவையான அளவு.

செய்முறை:

பலாப்பழத் துண்டங்களில் கொட்டை நீக்கி மிகவும் பொடியாக நறுக்கி சுமார் ஒரு மணி நேரம் வெயிலில் காயவிடவும்.

பிறகு அகலமான பாத்திரத்தில் எண்ணெய் நீங்கலாக அனைத்து பொருட்களையும் ஒன்றுசேர்த்து, நன்கு குலுக்கி, கடுகு எண்ணெயை காயவைத்து ஊற்றி, ஒருநாள் ஊறவிட்டு பரிமாறவும்.

செம டெஸ்ட் ஆக இருக்கும் இந்த பலாப்பழ ஊறுகாய்.

(அப்படியே பலாப்பழக் கொட்டையை வீணாக்காமல் நன்கு வேகவைத்து உருளைக்கறியிலோ அல்லது குருமாவிலோ சேர்க்கலாம். சுவையாக இருக்கும்)

கொய்யாப்பழ ஊறுகாய்

கொய்யாப்பழ ஊறுகாய்
கொய்யாப்பழ ஊறுகாய்www.slurrp.com

தேவையான பொருட்கள்:

கொய்யாப்பழம் – 6, மிளகாய் தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்,  உப்பு - இரண்டு டீஸ்பூன்,  எலுமிச்சை பழச்சாறு - கால் கப்,  வெல்லம் - சிறு துண்டு.

தாளிக்க: 

கடுகு - அரை டீஸ்பூன், எண்ணெய் - தேவையான அளவு, (வெந்தயம் - கால் டீஸ்பூன். பெருங்காயம் - அரை டீஸ்பூன் வறுத்துப் பொடிக்கவும்)

செய்முறை:

கொய்யாப்பழத்தை நன்கு கழுவி துடைத்து  துருவிக்கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு தாளித்து துருவிய கொய்யாப்பழத்தை சேர்க்கவும். (கொய்யாப்பழம் சற்று செங்காயாக இருப்பது நல்லது) மிதமான தீயில் இரண்டு நிமிடங்கள் வதக்கி, பிறகு எலுமிச்சை பழச்சாறு மிளகாய் தூள், வெந்தய பெருங்காயத்தூள் சேர்த்து இரண்டு நிமிடங்கள் நன்கு கிளறி இறக்கும் தருவாயில் வெல்லம் சேர்த்து இறக்கவும்.

பூரி சப்பாத்திக்கு செம்ம காம்பினேஷன் இந்த ஊறுகாய்!

திராட்சை ஊறுகாய்

திராட்சை ஊறுகாய்
திராட்சை ஊறுகாய் brooklynsupper.com

தேவையான பொருட்கள்:

பச்சை திராட்சை அல்லது கருப்பு திராட்சை (உங்கள் விருப்பம்) (கொட்டை நீக்கியது) - நான்கு கப்,  உப்பு - தேவையான அளவு , மிளகாய்த்தூள் - கால் கப்,  கடுகு தூள் - ஓரு டேபிள்ஸ்பூன், வெந்தயப் பொடி - ஒரு டீஸ்பூன், தாளிக்க எண்ணெய்- சிறிதளவு கடுகு - அரை டீஸ்பூன்

செய்முறை:

திராட்சையை நன்கு கழுவி துடைத்து இரண்டாக கீரி விதைகள் இருந்தால் விதைகளை நீக்கிவிட்டு வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு தாளித்து, திராட்சை, உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். திராட்சை சிறிது வெந்து மென்மையானதும் மிளகாய்த்தூள், வெந்தய பெருங்காயப் பொடி சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். உடனே சாப்பிடத் தோதான இந்த ஊறுகாய், 10 நாட்கள் ஆனாலும் கெட்டுப்போகாது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com