உஷார்: ஆயிரம் கட்டுவிரியன் பாம்புகளுக்கு இணையானதா LPG?

LPG safety tips
LPG safety tipsimage credit: AI
Updated on
MM strip
MM strip

என்ன வாசகர்களே கட்டுரையின் தலைப்பை பார்த்ததுமே பயந்து விட்டீர்களா? ஆமாம், ஆயிரம் கட்டு விரியன் பாம்புகளை ஒரு கூடையில் நிரப்பி வைப்பதற்கு இணையானது ஒரு எல்பிஜி சிலிண்டர். எனவே நமது இல்லங்களில் உபயோகித்து வரும் எல்பிஜி எனப்படும் எரிபொருள் பாதுகாப்புடன் கையாளப்பட வேண்டும்.

மீத்தேன் தொடங்கி பியூடேன் வரையிலான (மீத்தேன்- CH 4, Ethane-C 2H6 Propane - C3H8 Butene -C4H10) வாயு நிலை ஹைட்ரோ கார்பன்களுக்கு மணமோ நிறமோ கிடையாது.

இவற்றை நாம் உபயோகப்படுத்தும் போது பல காரணங்களால் கசிவு ஏற்படும். அவ்வாறு கசிவு ஏற்படும் போது நம்மால் அந்தக் கசிவினை உணர இயலாது. ஏனெனில் அவற்றிற்கு மணம் கிடையாது.

இந்த நிலைப்பாட்டினை நீக்குவதற்காக எல்பிஜியில் எந்தப் பக்க விளைவு களையோ ரசாயனம் மாற்றங்கள் ஏற்படுத்திடாத Mercaptan Sulphur C2H5 SH என்னும் ரசாயனப் பொருள் மிக மிகச் சிறிய அளவில் கலக்கப்படுகிறது.

இது வாந்தி எடுக்கும் உணர்வை உண்டாக்கும் ஒரு ரசாயன கலவையாகும். அதனால் தான் கசிவு ஏற்படும் போது அந்தக் கசிவினை நம்மால் உணர முடிகிறது. கசிவு ஏற்படும் போது எல்பிஜியின் அடர்த்தியானது காற்றைவிட மிகுந்திருப்பதால் மேலே சென்று காற்றுடன் கலக்க இயலாது.

ஆகவே அவை சமையலறையில் அனைத்து பகுதிகளிலும் பாம்புகளைப் போல ஊர்ந்து சென்று ஆங்காங்கே பதுங்கிக் கொண்டிருக்கும். சமையல் அறையில் இத்தகைய கசிவு இருக்கும் போது குமட்டலை உண்டு பண்ணும் வாசனையை ஒருவர் நுகர்ந்தால், மின்சார விளக்குகளைப் போடுவதோ, தீபம் ஏற்றுவதோ, அடுப்பை பற்ற வைக்கவோ கூடாது. ஜன்னல் கதவுகள் மற்றும் வாயில் கதவுகள் திறந்த நிலையில் இருக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
LPG Cylinder | ஒரு மாதத்தில் எத்தனை சிலிண்டர் புக் பண்ணலாம் தெரியுமா?
LPG safety tips

இரவில் எல்பிஜி சிலிண்டர் ரெகுலேட்டர் மூடிய நிலையில் வைத்திருக்க வேண்டும் அல்லது குறிப்பிட்ட கால அளவுக்குள் அதனை மாற்ற வேண்டும். சமையலறை எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

தற்போது பாமர மக்களுக்கும், குறிப்பாகக் குடிசைப் பகுதிகளில் உள்ளவர்களுக்கும் இலவச எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படுகின்றன. அவர்கள் பாதுகாப்பாக இவற்றைப் பயன்படுத்தவில்லை என்றால் பெரியதொரு ஆபத்துக்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

இந்தக் கட்டுரையைக் காணும் நம் வாசகர்கள் பிறரிடம் எல்பிஜியினால் விளையக்கூடிய ஆபத்தினை எடுத்துச் சொல்ல வேண்டும்.

logo
Kalki Online
kalkionline.com