மாமருந்து மாசிக்காய்

மாமருந்து மாசிக்காய்
Published on

மாசிக்காய் மரத்தின் பிசினிலிருந்து வரும் ஒரு மூலிகை தான் மாசிக்காய். அதாவது மரத்திலிருந்து வடியும் பால் உறைந்து கெட்டிப்படும். இதைத்தான் மாசிக்காய் என்று சொல்கிறோம்.

மாசிக்காய் பொடியை தேன் அல்லது நெய்யில் கலந்து சாப்பிட்டு வர மாதவிடாய் காலத்தில் அதிக ரத்த போக்கு ஏற்படுவது நிற்கும். மாதவிடாய் நேரத்தில் உண்டாகும் இடுப்பு வலி, வயிறு வலி உபாதை குறையும். கருப்பையில் இருக்கும் அழுக்குகள், நச்சுக்கள் நீங்கும். கருப்பை பலம் பெறும். 

மாசிக்காய் பொடியை குடிநீரில் கலந்து வாய்கொப்பளித்து வர நாக்கில் இருக்கும் புண்கள் ஆறும். பல் கூச்சம், ஈறுகளில் வலி, பற்களில் ரத்தகசிவு போன்ற பிரச்சனைகள் இருந்தால் மாசிக்காயை வாயில் போட்டு மென்று அதன் சாறை முழுங்க வேண்டும்.

குழந்தை பிறக்கும் போது அதன் நாக்கில் மாவு போன்று வெள்ளை நிறத்தில் படிந்திருக்கும். அவை முழுமையாக நீங்க, மாசிக்காயையும், ஜாதிக்காயையும் சந்தனக்கல்லில் உரசி இலேசாக குழந்தையின் நாக்கில் தடவலாம்.

மாசிக்காய் பொடியை சிறிது பசும்பாலில் விட்டு குழைத்து நாக்கில் தடவினால் சிறிது நொடிகளிலேயே இதய படபடப்பு நிற்கும்.

கால் இடுக்கில் வரக்கூடிய சேற்றுபுண்ணை கிருமிகளோடு அழிக்கவும், விரல் இடுக்குகள் மீண்டும் பழைய நிலைமைக்கு வரவும் மாசிக்காய் பயன்படுத்தலாம். இரவு தூங்கும் முன்பு மாசிக்காயை நீரில் குழைத்து விரல் இடுக்கில் புண் இருக்கும் இடத்தில் தடவி வந்தால், சேற்றுப்புண் வந்த சுவடு தெரியாமல் நீங்கிவிடும்.

தேமல், படை, சொறி, சிரங்கு போன்றவற்றின் மீதும் மாசிக்காய் பொடியை தினமும் நீரில் குழைத்து தினமும் தடவி வர நல்ல குணம் கிடைக்கும்.

மாசிக்காய் பொடியை ஒரு சிட்டிகை அளவு எடுத்து அதை தேனில் கலந்து ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் வயிற்று போக்கு குணமாகும்.

குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க வழங்கப்படும் உரை மருந்தில் மாசிக்காய் முக்கியமானது. `டானின்' சத்து நிறைந்த மாசிக்காயைப் பொடியாக்கி ஒரு டீஸ்பூன் அளவு எடுத்து தேன் சேர்த்து குழந்தைகளுக்குக் கொடுத்தால் பேதி, சீத பேதி நிற்கும்.

மாசிக்காய், ஜாதிக்காய் மற்றும் கிராம்பைத் தூளாக்கி, இந்தக்கலவையை முகத்தில் தடவி, சற்றுநேரம் கழித்து முகத்தை கழுவிவர, முகத்தின் பொலிவு கூடிவிடும்.

மாசிக்காய் பொடியை, கற்பூரவள்ளி இலை சாற்றுடன் கலந்து சாப்பிட, டான்சில்ஸ், இருமல், தொண்டைக்கட்டு மற்றும் தொண்டை வலி போன்ற பிரச்னைகளிலிருந்து சிறந்த நிவாரணம் கிடைக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com