2026 மகா சிவராத்திரி: தமிழகத்தின் புகழ்பெற்ற கோவில்களில் அரங்கேறப்போகும் நாட்டியாஞ்சலி விழா!

natyanjali-dance-festival-2026
natyanjali-dance-festival-2026
மும்பை மீனலதா

வணக்கம். ஆர். மீனலதாவாகிய அடியேன், என்னைப் பற்றிய சில வரிகளைத் தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். **சிறு வயது முதலேயே, என்னுடன் ஐக்கியமான எழுத்து, நடிப்பு, பேச்சு, பாட்டு, விளையாட்டு, பிறர்க்கு உதவுவது, புது மாதிரியாக யோசித்து ஆர்வத்துடன் செயல்படுவது போன்ற பல செயல்கள், சீனியர் சிட்டிசன் ஆன பிறகும் தொடர்கிறது. (சகலகலாவல்லி என்று அநேகர் என்னைக் குறித்து கூறுவதுண்டு😊) **கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக எழுதி வருகிறேன். **தமிழார்வம் கொண்டவள். **அனைத்தும் டிஜிட்டல் மயமாக ஆனபோதிலும், எழுத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து, எழுதுவதை அதிகம் விரும்புபவள். **கட்டுரை, நேர்காணல், சிறுகதை, சமையல், மோட்டிவேஷன், நகைச்சுவைக்கதை போன்ற பல்வேறு விஷயங்களைக் குறித்து எழுதி வருகிறேன். **பத்திரிகைகள் அளிக்கும் ஆதரவு, புது விஷயம் எழுத அளிக்கும் தூண்டுதல், அவ்வப்போது அவர்கள் கொடுக்கும் அருமையான டிப்ஸ் ஆகியவைகள் எனது எழுத்தினை மேன்மேலும் மெருகூட்ட மிகவும் உதவியாக உள்ளன.

Updated on
Mangayar malar strip
Mangayar malar strip

மும்பை வாசியான குரு பத்மினி ராதாகிருஷ்ணன்
சௌந்தர்ய நாட்டிய கலாலய அறக்கட்டளையின் நிறுவனர், திறமையான பரதநாட்டியக் கலைஞர் மற்றும் ஆசிரியர் ஆவார். 

பத்மினி ராதாகிருஷ்ணன்,  நடனத்திற்கு ஏற்ற அதிர்வு, மெல்லிசை மற்றும் நிலையான உச்சரிப்பு ஆகியவற்றால் நிறைந்த குரலைக் கொண்டவர்.

மும்பை பல்கலைக்கழகத்தில் கர்நாடக இசையில் முதுகலை டிப்ளோமா பெற்ற பத்மினி ராதாகிருஷ்ணன், இசையில் பாராட்டத்தக்க தேர்ச்சியையும், நட்டுவாங்கத்தில் நிபுணத்துவத்தையும் பெற்றுள்ளார்.

பத்மினி ராதாகிருஷ்ணனுடைய நிறுவனமான சௌந்தரி நாட்டிய கலாலய அறக்கட்டளை இந்தியா முழுவதும் மற்றும் அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா ஆகிய இடங்களில் பரவியுள்ளன.

மகா சிவராத்திரி நாட்டியாஞ்சலி பயணம்:

ஒவ்வொரு வருட சிவராத்திரியின் போதும் பத்மினி ராதாகிருஷ்ணன்,  ஒரு சில மாணவர்களுடன் பல்வேறு கோயில்களில் பரதநாட்டிய நிகழ்ச்சி நடத்த தெற்கு நோக்கி 5 - 6 நாட்கள் பயணம் மேற்கொள்வதை அவர் வாயிலாக நேரிடையாக கூறிய விபரங்கள்--

மகா சிவராத்திரி நாட்டியாஞ்சலி பயணம்,  எனக்கு ஒரு புதுமையான அனுபவமாகத் தொடங்கி,  பின்னர்  தெய்வீக அனுபவமாக மாறியது.

எங்கள் நிகழ்ச்சியின் பின்னணியில் உள்ள முக்கிய நோக்கம் இறைவனுக்கு அஞ்சலி செலுத்தும் கருத்தாகும்.  இது அனைத்து நாட்டியாஞ்சலி விழாக்களுக்கும் அடிப்படையாகும்.

மகா சிவராத்திரி நாட்டியாஞ்சலி விழா  பல ஆண்டு காலங்களாக, சில கோயில்களில் மட்டுமே  இருந்தது. நாளடைவில், மேலும்  பல கோயில்களில் சிவராத்திரி நாட்டியாஞ்சலி விழா ஆரம்பமானது.  தென்னிந்தியா முழுவதும் உள்ள பல கோயில்களில் இந்த நாட்டியாஞ்சலியை மீண்டும் உயிர்ப்பித்தவர்கள் டாக்டர் பத்மா சுப்பிரமணியம், மற்றும் நிருத்யோதயா ஆகும்.  மேலும், நிருத்யோதயாவைச் சேர்ந்த ஸ்ரீ கண்ணன் பாலகிருஷ்ணன் பல்வேறு இடங்களில் நாட்டியாஞ்சலி விழாக்களில் பல கலைஞர்களின் பங்கேற்பை பக்தியுடன் ஒருங்கிணைத்து வருகிறார்.

மகா சிவராத்திரி நாட்டியாஞ்சலி விழாக்களில் எங்களது அமைப்பு 20 ஆண்டுகளுக்கும் மேலாக பங்கெடுத்து  வருகிறது.  எங்களது தெய்வீகக் கலை,  என்னை ஒவ்வொரு வருடமும் அங்கு அழைத்துச் செல்வதாக உணர்கிறேன். மேலும் நாங்கள் கோயில்களில் நிகழ்ச்சி நடத்தும்போது எனக்கு எப்போதும் ஒரு சிறப்பு ஆற்றல், நல்ல அதிர்வுகள் மற்றும் திருப்தி கிடைக்கிறது.

சிவராத்திரி நாட்டியாஞ்சலி  நிகழ்ச்சிகளிலிருந்து நான் நிறைய நேர்மறையான அதிர்வுகளைப் பெறுகிறேன். சிவராத்திரி வாரத்தில்,  எனது இளைய தலைமுறை மாணவர்கள் இந்த அழகான கோயில்களில் நிகழ்ச்சி நடத்துவதில் மிகவும் ஆர்வமாகவும் அர்ப்பணிப்புடனும் இருப்பதைக் கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். மேலும் ஒவ்வொரு ஆண்டும் அதை எதிர்நோக்குகிறேன். சர்வஸ்வரனின் ஆசீர்வாதங்களைப் பெறவும், நிகழ்ச்சி நடத்தவும் ஆர்வமுள்ள என் அன்பான மாணவர்களுடன் நான் பயணிக்கும்போது, ​​முழுப் பயணத்தையும் நான் ரசிக்கிறேன்.

ஒவ்வொரு வருடமும் எங்களது ஸௌந்தர்ய நாட்டிய கலாலயா அறக்கட்டளை நிறுவனத்தைச் சேர்ந்த அனைவரும் சிவராத்திரி  நாட்டியாஞ்சலி தெய்வீக யாத்திரையை எதிர் பார்க்கிறோம்.

இந்த ஆண்டு மகா சிவராத்திரி நாட்டியாஞ்சலி தெய்வீகப் பயணம் மும்பை உட்பட தமிழகத்தின் சில கோயில்களில் நடைபெறவுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com