43வது ஆண்டில் காலடி பதிக்கும் நம் மங்கையர் மலருக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.
எத்தனை வேலைகள் இருந்தாலும் மங்கையர் மலரில் போட்டி அறிவிப்பை பார்த்து விட்டால் போதும் செல்ஃபோனில் சார்ஜ் ஏறுவதுபோல் என்னுள் எனர்ஜி லெவல் ஏறி விடைகள் கண்டுபிடிப்பதில் களத்தில் இறங்கி விடுவேன். என் எனர்ஜி பூஸ்ட்டரே மங்கையர் மலர்தான்.
பற்பல போட்டிகளில் பரிசுகள் பெற்றிருந்தாலும், 2020 ஆம் ஆண்டு சிநேகித சமையல் போட்டியில் முதல் பரிசாக "வெட் கிரைண்டர் " பெற்றது என் வாழ்வில் மறக்க முடியாதது. மங்கையர் மலரை வாசகிகளாகிய நாங்கள் வண்டைப் போல் சுற்றி வரக் காரணம் "தரம் எனும் தேன் மங்கையர் மலரில் இருப்பதால்தானோ!" என எண்ணத் தோன்றுகிறது.
வாசக / வாசகிகளின் படைப்பிற்கு மரியாதை தந்து, அவர்களின் பங்களிப்பு அதிகம் இடம் பெறும்படி செய்யும் நம் மங்கையர் மலரின் பணி மென்மேலும் பெருக என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.