Mangayar Malar 44th anniversary  contest result
Mangayar Malar 44th anniversary contest result

'தினம் ஒரு சவால்' - போட்டி 3 முடிவுகள்!

Published on
படத்திற்கேற்ற ‘நச்' வாசகம்
படத்திற்கேற்ற ‘நச்' வாசகம்

1. சாமுண்டீஸ்வரி பன்னீர்செல்வம்

வாழ்க்கை முழுவதும்

பெண்களுக்கு சடுகுடு

வாழும் வரை போராடு

2. S. ஜெயகாந்தி

தலைமுதல் பாதம்வரை தாங்கும் சக்தி தந்த இறைவனுக்கு நன்றி!

3. பானுரேகா பாஸ்கர்

சுகமான சுமைகள் தூக்கி

தோள் சாய்ந்து போனாலும் வருங்காலம் வளமாகுமே!

4. உமா ஸ்ரீதரன்

தாய்மை: மனதில் சுகம், உடலில் கனம்

5. ரஞ்சிதா சந்திரசேகர்

தோளிலுள்ள குழந்தைகளோ,

கையிலுள்ள துணிப்பையோ அல்ல

மனதிலுள்ள பொறுப்பற்ற கணவனே சுமை!

6. ஶ்ரீவித்யா பசுபதி

மனதில் அன்பைச் சுமக்கும் தாய்மைக்கு இவை சுகமான சுமைகள்!

7. கலைமதி சிவகுரு

இவ்வுலகில் சர்வகாலமும்

சுமைதாங்கியாகிய ஈடு இணையற்ற சக்தி

அம்மா மட்டுமே

8. M.S.அருள்மொழி

கருவறையில் சுமந்த உங்களை இடுப்பிலும்,தோளிலும் சுமப்பதும் சுகமே.

9. R.காயத்ரி

கையில் இருக்கும் துணிப்பை கனத்திருந்தாலும் தாய்க்கு குழந்தைகள் பாரமாய் தெரிவதில்லை

10. சரோஜினி தங்கராஜன்

கருவில் மட்டுமல்ல வாழ்க்கையிலும் தன்பிள்ளைகள் முன்னேறும் வரை அவர்களை சுமப்பவள் அம்மா.

logo
Kalki Online
kalkionline.com