'தினம் ஒரு சவால்' - போட்டி 4 முடிவுகள்!

Mangayar Malar 44th anniversary  contest result
Mangayar Malar 44th anniversary contest result

1. சாமுண்டீஸ்வரி பன்னீர்செல்வம்

1.காலையில் தினமும் கண்விழித்தால்…

  கையெடுத்து வணங்குவது மருமகளை

2. நான் ரெடி தான்…வரவா..

   மச்சினி நான் இறங்கி வரவா

3. ஒருவன் ஒருவன் முதலாளி

    உலகில் மற்றவன் ஏமாளி

4. கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே…

    அன்பே நீ கடிதம் எழுதாதே.. எனக்கு படிக்க தெரியாதே..

5. காதலின் தீபம் ஒன்று…

    வாழ்க்கையே மாறி போச்சு

2. S. ஜெயகாந்தி

1. காலையில் தினமும் கண் விழித்தால்…

    நான் முத்தமிடும் ஆண்

     என் கணவன்.

2. நா ரெடிதான்.... வரவா?

   வேணாம்.. வேணாம்..

   வரவே வேணாம்.

3. ஒருவன் ஒருவன் முதலாளி

    ஒன்பது பேர் அவன் எதிராளி

4. கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே

    நோ.. நோ..

    கடிதமே வேணாம் என் செல்லமே..

5. காதலின் தீபம் ஒன்று

    தோல்வியால் அணைந்ததின்று..

3. பானுரேகா பாஸ்கர்

1. காலையில் தினமும் கண்விழித்தால்

    கடமை அழைக்குதே நேரம் பறக்குதே

2. நான் ரெடி தான் வரவா

    கொஞ்சம் பொறு தலைவா

3. ஒருவன் ஒருவன் முதலாளி

    ஊழைப்பன் என்றும் தொழிலாளி

4. கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே

    பொண்மணி எனக்கு போதுமடி உன் புன்னகையே

5. காதலின் தீபம் ஒன்று

   அணையாத தீபமடி என்றும்

4. உமா ஸ்ரீதரன்

1. காலையில் தினமும் கண்விழித்தால்....

   ஸ்ட்ராங் காபி வாசனை

2. நா ரெடிதான்.... வரவா?

   ஐயோ செலவா...

3. ஒருவன் ஒருவன் முதலாளி.....

   மத்தவனெல்லாம் ஏமாளி

4. கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே......

    வாட்சப் கூட தெரியாத ஆளா நீ

5. காதலின் தீபம் ஒன்று....

    முதலில் விளக்கு வாங்கு இன்று

5. ரஞ்சிதா சந்திரசேகர்

1. காலையில் தினமும் கண் விழித்தால்,

   "என் கண் முன் தெரிவது பாத்திரம், கழுவ வேண்டிய பாத்திரம்,   

    அடுகளையில் உள்ளதே!"

2. நா ரெடிதான் வரவா,

   "உன்னை பெண் கேட்க வரவா!"

3. ஒருவன் ஒருவன் முதலாளி,

   "அவனுக்கு இல்லை எதிராளி!"

4. கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே,

   "பெண்மணி, இன்று உன்னை தேடினேன்

    உன்னை காணாது நான்    வாடினேன்!"

5. காதலின் தீபம் ஒன்று,

   "விலக்கியதே என் இருளை இன்று!"

6. ஶ்ரீவித்யா பசுபதி

1. காலையில் தினமும் கண் விழித்தால்

    நான் ரசித்துக் குடிப்பது காஃபி

    உயிரென்றாலே காஃபி

    பில்டர் காஃபி போல் வருமா?

2. நா ரெடி தான்…. வரவா…

    என்னங்க நா

    ஜவுளிக் கடைக்கு சேர்ந்து போக கெளம்பி வரவா

3. ஒருவன் ஒருவன் முதலாளி

   அவனே நேற்று தொழிலாளி

   உழைப்பவன் தானே அறிவாளி

   அவனே என்றும் முதலாளி

4. கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே

   கண்ணனே உன் கடிதம் கிடைத்தது நானும்

   கடிதம் வரைகிறேனே

   உந்தன் கடிதம் படித்ததும் இதயம் உருகுது

  அதைக் கடிதமாய் வடிக்கையில் கண்கள் பனிக்குது

5. காதலின் தீபம் ஒன்று

   ஒளிர்கிறதே எந்தன் கண்ணில்

   பார்வையில் வந்த மயக்கம்

   கவிதையில் கண்ட இன்பம்

   தயக்கம் என்ன… காதல் சொல்லு…

7. கலைமதி சிவகுரு

1. காலையில் தினமும் கண்விழித்தால்

   என் காதில் கேட்பது குயிலிசையே!

2. நான் ரெடி தான் வரவா?

   ஆச்சி நான் ஓடிவரவா?

3. ஒருவன் ஒருவன் முதலாளி

   மன உறுதி இல்லாதவன் ஏமாளி

4. கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே

   சொல்லம்மா எவ்வளவு பணம் உண்டு

   உன்னிடம் என்னிடம் ஏதும் இல்லையே

5. காதலின் தீபம் ஒன்று

    கண்ணீர் விடுகின்றது ஏங்கி ஏங்கி நெஞ்சம் வாடுகின்றது.

8. M.S.அருள்மொழி

1. காலையில் எழுந்ததும் கண்விழித்தால்

   எனக்கு காபி கொடுக்கும் அம்மா,

   சுட சுட காபி என்றால் அம்மா,

   பில்டர் காபி போல் வருமா.

2. நான் ரெடி தான் வரவா?

    உன்ன நா தேடி வரவா?

3. ஒருவன் ஒருவன் முதலாளி

    கொடுப்பவன் எல்லாம் கொடையாளி.

    கேட்பவன் எல்லாம் கடனாளி,

    கடனை கட்டி முடிப்பவனே அறிவாளி.

4. கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே,

    தேவியே உன்னை நினைத்து பூஜைகளை செய்திடுவே னே.

5. காதலின் தீபம் ஒன்று

   ஏற்றினாளே அவள் போனில்.

   கிராஸ் டாக்கில் வந்த சொந்தம்,

   காதலில் விழுந்...தது. கலக்கமென்ன...

9. R.காயத்ரி

1. காலையில் தினமும் கண்விழித்தால்

    கண்மணி நீயே கவிதையாய் வருகின்றாய்.

2. நான் ரெடிதான்... வரவா?

    சாம்பார் வாசனை தூக்குதே மணமாய்

3. ஒருவன் ஒருவன் முதலாளி

    மற்றவர் உணர்வை உணர்ந்தவன் அறிவாளி

4. கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே

    செங்கனி என் வாழ்வோடு நீயென்றும் கவிபாடும் வசந்தமே

5. காதலின் தீபம் ஒன்று

    கனவில் நீ தோன்றினாயே

10. சரோஜினி தங்கராஜன்

1. காலையில் தினமும் கண் விழித்தால்

    நான் கைதொழும் தேவதை என் செடிகள்

2. நான் ரெடிதான் வரவா ?

    நல்ல செடி ஒன்று  தரவா?

3. ஒருவன் ஒருவன் முதலாளி

    என் தோட்டத்திற்கு நானே தொழிலாளி

4. கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே

   பொன்மணி உன் வீட்டு செடிகளெல்லாம் சௌக்கியமா

   என் வீட்டு செடிகள் சௌக்கியமே

5. காதலின் தீபம் ஒன்று

    நட்டேனே என் வீட்டில் பல செடிகள் இன்று.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com