'ஸ்வீட் - காரம் - பட்சணம்' சமையல் போட்டி!

Cooking Contest
'ஸ்வீட் - காரம் - பட்சணம்' சமையல் போட்டி!

ஹாய் தோழிஸ்...

இதோ வந்து விட்டது மங்கையர் மலரின் அடுத்த பண்டிகை கால சிறப்பு போட்டி!

இணைந்து வழங்கும்!

ஸ்வீட்-காரம்-பட்சணம் சமையல் போட்டி!

30 பரிசுகள் காத்திருக்கின்றன!

இந்த போட்டியில் கலந்து கொள்வது ரொம்ப சுலபம். நீங்கள் செய்ய வேண்டியது - தீபாவளி பண்டிகை காலத்திற்கு ஏற்றவாறு ஒரு ஸ்வீட் மற்றும் ஒரு காரம் பட்சணம் ரெசிபி அனுப்ப வேண்டும். தரம், புதுமை, வழங்கிய விதம் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும் 30 ரெசிபிகளுக்கு ஸ்வீட் காரம் காபியின் தீபாவளி பரிசு காத்திருக்கிறது!

ஸ்வீட்-காரம்-பட்சணம் போட்டி விதிமுறைகள்:

1. உங்கள் ஸ்வீட்-காரம்-பட்சணம் ரெசிபி மிகத் தெளிவாக எழுதப்பட்டிருக்க வேண்டும்.

2. புதுமையானதாகவும், புத்துணர்ச்சி தருவதாகவும், சத்து மிகுந்ததாகவும், சட்டு புட்னு செய்யக் கூடியதாகவும் இருப்பது நல்லது.

3. ரெசிபிக்கான தலைப்பு, தேவையான பொருட்கள், செய்முறை என்று படிப்படியாக விவரமாக எழுதவும்.

4. ஒருவர் 1 ஸ்வீட், 1 காரம் என்ற வகையில் இரண்டு பட்சண ரெசிபிகள் மட்டுமே அனுப்பலாம்.

5. நீங்கள் கொடுத்த ரெசிபியை செய்து அதற்கான புகைப்படங்களை இணைக்க வேண்டும். புகைப்படங்கள் இல்லாத ரெசிப்பிக்கள் தேர்வுக்கு தகுதி பெறாது.

6. நீங்கள் இரண்டு விதத்தில் இந்த போட்டியில் பங்கேற்கலாம்.

ஒன்று: இந்தப் பக்கத்தில் பிரசுரமாகி இருக்கும் படிவம் அனைத்து விவரங்களுடன் முழுமையாகப் பூர்த்தி செய்யப்பட்டு, ரெசிபி மற்றும் தகுந்த புகைப்படங்கள் இணைக்கப்பட்டு submit செய்யலாம்.

இரண்டு: customercare@kalkiweekly.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு தெளிவாக பொருட்கள், செய்முறை விவரங்களுடன் புகைப்படங்கள் இணைத்து அனுப்பலாம்.

7. ஸ்வீட்-காரம்-பட்சணம் ரெசிபிக்களை ஆன்லைன் மூலமாக மட்டுமே அனுப்பலாம். தபாலில் அனுப்புவதைத் தவிர்க்கவும்.

8. போட்டி நிபந்தனைகளுக்கு உட்பட்டது. ஆசிரியர் தீர்ப்பே இறுதியானது.

9. பரிசு பெரும் 30 'ஸ்வீட்-காரம்-பட்சணம்' ரெசிபிகள் kalkionline.com இணையதளத்தில் நவம்பர் 1, 2023 முதல் வெளியிடப்படும்.

தீபாவளி பட்சண பரிசுகளை வழங்குவோர்:

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com