மங்கையர் மலர் நடத்தும் 'எங்க ஊரு Super Woman'! - மகளிர் தின ஸ்பெஷல்!

Enga ooru super woman
Enga ooru super woman

அன்பு வாசகர்களே!

மகளிர் தினத்தை முன்னிட்டு நமது மங்கையர் மலர் நடத்தும் சிறப்புப் போட்டி 'எங்க ஊரு SUPER WOMAN' www.kalkionline.com இணையதளத்தில் நடைபெறுகிறது.

போட்டி விதிமுறைகள்:

 • இப்போட்டி 08.03.2024 காலை 11:00 மணி முதல் 09.03.2024 மாலை 05:00 வரை (30 மணி நேரம்) தொடர்ந்து நடைபெறும்.

 • மகளிர் தினத்தைக் கொண்டாடும் விதமாக, நீங்கள் வசிக்கும் பகுதியில், நீங்கள் பார்த்து வியந்த சாதனை படைத்த ஒரு பெண்மணியை உலகத்திற்கு அறிமுகப்படுத்துவதற்கான வாய்ப்பு இது!

 • புத்திக் கூர்மை, மிகச்சிறந்த ஆளுமை, பிறருக்கு உதவும் பாங்கு, சமூக அக்கறை, விளையாட்டில் சாதனை படைத்து வரும் பெண்மணி தற்போது உங்கள் ஊரில் இருக்கிறார்களா?

 • மேலிருக்கும் குறியீடுகளின் அடிப்படையில்  உங்களுக்கு தெரிந்த சாதனைப்  பெண்மணியைப் பற்றி 500 வார்த்தைகள் அடங்கிய கட்டுரையாகவோ அல்லது நேர்காணலாகவோ எழுதி சமர்ப்பிக்க வேண்டும்.

 • நீங்கள் எழுதுவதற்கான நேரம் 08.03.2024 காலை 11:00 மணி முதல் 09.03.2024 மாலை 05:00 வரை (30 மணி நேரம்) மட்டுமே.

 • இந்தப் போட்டிக்கான பதிவுப் படிவமும், எழுதுவதற்கான இடமும் www.kalkionline.com இணையதளத்தில் மட்டுமே இருக்கும்.

 • தாங்களும் இணையதளத்தின்  வாயிலாக மட்டுமே உங்கள் கட்டுரையை தமிழில் டைப் செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

 • தளத்தில் பிரசுரமாகி இருக்கும் படிவம் அனைத்து விவரங்களுடன் முழுமையாகப் பூர்த்தி செய்யப்பட்டு submit செய்யப்பட வேண்டும்.

 • போட்டியின் முதலாவது கட்டமாக, பெறப்படும் கட்டுரைகளின் அடிப்படையில் மிகச்சிறந்த 8 சாதனை பெண்மணிகள் தேர்வு செய்யப்படுவார்கள்.

 • இந்த 8 சாதனை பெண்மணிகளுக்கும் அடுத்தக்கட்ட போட்டி நடைபெறும். அதிலிருந்து 5 பேர் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கான விவரங்கள் தேர்வானவர்களுக்கு பின்னர்  தனிப்பட்ட முறையில் தகவல் அறிவிக்கப்படும்.

 • இந்த 5 சாதனை பெண்மணிகளை மங்கையர் மலர் குழு நேரில் சென்று சந்தித்து உரையாடி ஒருவரை ‘SUPER WOMAN’  ஆக தேர்வு செய்யும்.

Vivekanandha Sarees
Vivekanandha Sarees
 • முதல் சுற்றில் தேர்வாகும் போட்டியாளர்களுக்கு சென்னை விவேகானந்தா சாரிஸ் வழங்கும் தலா ரூ.1000/- மதிப்புள்ள பரிசுக் கூப்பன்கள் வழங்கப்படும். இப்பரிசு தேர்வான 8 சாதனை பெண்மணிகளுக்கும், அவர்களை அடையாளம் காட்டிய 8 வாசகர்களுக்கும் வழங்கப்படும்.

 • அடுத்தகட்டமாகத் தேர்வாகும் சாதனை பெண்களுக்கு மட்டும் சிறப்புப் பரிசுகள் வழங்கப்படும்.

 • இப்போட்டி சம்பந்தமான எவ்வித தகவல் தொடர்பும் ஊக்குவிக்கபடமாட்டாது.

 • போட்டி நிபந்தனைகளுக்கு உட்பட்டது. நடுவர் மற்றும் ஆசிரியர் தீர்ப்பே இறுதியானது.

Enga ooru super woman
Enga ooru super woman

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com