மார்கழி கோல விதிமுறைகள்!

மார்கழி கோல விதிமுறைகள்!

ஹாய் வாசகீஸ்!

மார்கழி வந்தாச்சு… உங்க வீட்டு வாசல்ல அழகழகா… கலர் கலரா… கோலங்கள் போட்டு அசத்துற நம்ம மங்கையர் மலர் வாசகிகளான நீங்க, kalkionline மூலமாக உங்க கைத்திறனை உலகமறியச் செய்யலாமே!

இந்த மார்கழி முழுவதும் தினம் தினம் வண்ணக்கோலங்கள் கல்கி ஆன்லைனில்  வெளியாகும். அதற்கு நீங்க என்ன செய்யணும்?

புள்ளி கோலங்கள், நேர்ப்புள்ளி, ஊடுபுள்ளி, நட்சத்திரக் கோலங்கள் முதல் ரங்கோலி வரை விதவிதமான கோலங்களை வரைந்து அனுப்பலாம்.

நீங்க வரையும் கோலங்கள் அனைத்தும் முழு வெள்ளைத்தாளில் தெளிவாக தெரியும்படி போட்டிருக்க வேண்டும்.

கோலங்கள் பேனாவிலும், வண்ணம் தீட்டியும் வரைந்து அனுப்பலாம். பென்சிலில் வேண்டாமே!

ஒருவரே எத்தனை கோலங்கள் வேண்டுமானாலும் அனுப்பலாம்.

தேர்ந்தெடுக்கப்பட்ட கோலங்கள் கல்கி ஆன்லைனில் வெளியாவதுடன், சன்மானமும் உண்டு.

கோலங்களை mm@kalkiweekly.com எனற இ மெயில் அல்லது தபாலிலும் அனுப்பலாம்.

தங்களது பெயர், விலாசம், தொலைபேசி எண் அவசியம் குறிப்பிட்டிருக்க வேண்டும்.

ஆசிரியர் தீர்ப்பே இறுதியானது.

தபாலில் அனுப்ப:

கல்கி குழுமம்

'கோகுலம்'

12/36, 4வது மெயின் ரோடு,

கஸ்தூர்பா நகர்,

அடையாறு,

சென்னை – 600 020.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com