மார்கழியும், கும்மிப்பாட்டும்!

துணுக்குகள்
மார்கழியும், கும்மிப்பாட்டும்!

மார்கழி மாதம் கிராமங்களில் அதிகாலை நேரத்தில் கோலம் இட்டு அதன் நடுவே பசுஞ்சாணியால் பிள்ளையார் பிடித்து வைத்து, அதன் மீது பூசணிப்பூ வைப்பது வழக்கம். அந்த சாணி உருண்டைகளை வரட்டியாக தட்டி வைப்பர்.

மார்கழி முடிந்து, தை பிறந்ததும் சிறு பெண்கள் குழந்தைகள் பிள்ளையாரை கூடையில் வைத்து வீடு வீடாக சென்று கும்மியடித்து பாடி, காசு பெறுவர். அந்த பணத்தில் அவல், வெல்லம், வாங்கி பிள்ளையாருக்கு படைத்து விட்டு, ஆற்றங்கரையில் கரைக்கும் போது பாடும் கும்மி பாட்டு இது.

வட்ட வட்ட பிள்ளையாரே, வாழக்காயும் பிள்ளையாரே,

உண்ணுண்ணு பிள்ளையாரே ஊமத்தங்கா பிள்ளையாரே!

வார வருஷத்துக்கு வர வேண்டும் பிள்ளையாரே,

போன வருஷத்துக்கு போயி வந்தீர் பிள்ளையாரே!

வாடாம வதங்காம வளர்த்தினோமே பிள்ளையாரே,

வாய்க்கால் தண்ணியிலே வளரவிட்டோம் பிள்ளையாரே!

சிந்தாமல் சிதறாமல் வளர்த்தினோமே பிள்ளையாரே!

சிற்றாத்து தண்ணியிலே சிந்துறமே பிள்ளையாரே!

போய் வாரும், போய் வாரும், பொன்னான பிள்ளையாரே!

வரவேணும் வரவேணும் வருஷா வருஷம் பிள்ளையாரே!

எனபாடி மகிழ்வர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com