

இந்தக் கதையில், மணமகளிடம் பாரம்பரிய கேள்விகள் கேட்கும் மாமியார், மாமனார் தலைமுறை இடைவெளியை எதிர்கொள்கிறார்கள். இசை, வாகனம் ஓட்டுதல், சமையல், வீட்டு வேலை, குழந்தை பராமரிப்பு, முதியோர் கவனிப்பு போன்ற அனைத்திலும், மணமகள் தொழில்நுட்ப வசதிகள், சேவை நிறுவனங்கள், வேலை-வாழ்க்கை சமநிலை ஆகிய நவீன அணுகுமுறையை வலியுறுத்தி, பழைய எதிர்பார்ப்புகளை சவாலுக்கு உட்படுத்துகிறார்.
இந்திய நாட்டு கலாச்சாரத்தில் பொருத்தமான வரனை தேர்ந்தெடுக்க பெற்றோர்களும் நெருங்கிய உறவினர்களும் பெண் வீட்டிற்கு நேர்காண சென்று வருவது பழக்கத்தில் இருக்கிறது. பின்வரும் நிகழ்ச்சிகள் அத்தகைய ஒரு சந்திப்பின் விளக்க உரையாகும்.
மணமகனின் தாயார் மணப்பெண்ணிடம்:
அம்மணி உனக்கு இசையில் ஆர்வம் உள்ளதா?
மணப்பெண்:
எனக்கு இசையில் பற்றுதல் உண்டு. ஆனால், அமேசான், ஸ்பாடிபிஐ, ஒய் டீ மியூசிக் போன்ற இசை ஒளிப்பதிவு பாடல்கள் எளிதில் கிடைப்பதால், இசையை கற்றுக்கொள்ளவும், பழகிக்கொள்ளவும் முயற்சி செய்வதில்லை.
மணமகனின் தகப்பனார் மணப்பெண்ணிடம்:
உனக்கு வாகனம் ஓட்ட தெரியுமா?
எனக்கு வாகனங்கள் ஓட்டத் தெரியும். உரிமை ஒப்புதல் இருக்கிறது. ஆனால் நகர்ப்போக்குவரத்து நெருக்கடி மிகை ஆனதால் நான் தானாக ஓட்டுவதில்லை. மேலும், மணி நேர வாடகை அடிப்படையில் ஓட்டுனர்கள் கிடைப்பதால் வேண்டும்பொழுது அவர்களைப் பணியில் அமர்த்தி அந்தத் தேவையை சமாளிக்கிறேன். தானியங்கி ஓட்டுதலைத் தவிர்க்கிறேன்.
கேள்வி மூன்று:
மணமகனின் தந்தை மணப்பெண்ணிடம்:
உனக்கு சமைப்பதில் பற்றுதலும் திறமையும் உண்டா?
மணப்பெண்:
சமைக்கும் திறமை குடும்பப்பெண்களுக்கு இயல்பாக ஏற்படுகிறது. ஆனால், நான் அலுவகத்தில் பணி செய்யம் பெண். எனக்கு சமைப்பதற்கு நேரம் கிடைப்பதில்லை. மேலும், வீட்டில் தாயார், மூத்த சகோதரிகள் போன்றவர்கள் அதில் ஈடுபடுகிறார்கள். மற்றப்பணிகளுக்கே என் நேரம் போதுவதில்லை. தேவைப்படும்போது, நேரம் கிடைக்கும்போது நான் கைகொடுக்கிறேன்.
அதையும் தவிர சுற்றுப்புறத்தில் பல விரைவு உணவு வழங்கும் சிறு தொழில் விற்பனை நிலையங்கள் இருக்கின்றன.
மணமகனின் அன்னை மணமகளிடம்:
உனக்குச் சமையல் பாத்திரங்கள், சமையல் மேடைகள், சமையல் தரை போன்றவைகளைச் சுத்தம் செய்யும் பழக்கம் உண்டா? மேலும் மாசுபட்ட துணிமணிகளைத் துவைக்கும் பழக்கம் உண்டா?
மணமகள்:
நீங்கள் எந்த நூற்றாண்டில் இருக்கிறீர்கள்? இந்தக் கேள்வி என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. இத்தகைய பணிகளுக்கு டிஷ்வாஷர், வாஷிங் மெஷின் போன்ற நூதனக் கருவிகள் இருக்கும்போது பிரச்னை ஏதும் இல்லை.
மணமகனின் அன்னை மணப்பெண்ணிடம்:
உனக்கு குழந்தைகளைப் பராமரிக்க, வளர்க்க இயல்பும் பற்றுதலும் உண்டா?
மணப்பெண்:
குழந்தைகள் என்றல் எனக்கு மிகவும் பற்றுதல் உண்டு. நான் பெண்ணல்லவா! ஆனால், நான் அலுவகத்தில் பணிபுரியும் பெண். எனவே, வீட்டில் இருக்கும்போது, நேரம் கிடைக்கும்போது குழந்கைளைப் பராமரிப்பேன். மற்ற நேரங்களில் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளவும் கண்காணிக்கவும் குழந்தைகள் பராமரிப்பாளர்களையும், செவிலியர்களையும் பணியில் இறுத்தி சமாளிப்பேன்.
மணமகனின் அன்னை:
உன் கணவரின் வயதான தாய்- தந்தையர்களைப் பார்த்துக்கொள்ள உன்னால் முடியுமா?
மணமகள்:
அவர்கள் வலிமையுடனும் ஆரோக்கியத்துடனும் இருக்கும்போது நான் அருகில் இருக்கும் தருணங்களில் கவனித்துக்கொள்வேன், அவர்கள் மூத்த உறுப்பினர்களாக மற்றும் மேலும் மூத்த குடிமக்களாக மாறும்போது தேவையான உதவியாளர்களை நியமித்தும் அல்லது தேவைக்கேற்றபடி மூத்த குடிமக்கள் நலப்பணி இல்லங்களில் சேர்ப்பித்தும் கண்காணிப்பேன். மேலும், உங்களுக்கு ஏதேனும் கேட்க வேண்டுமா?